வாராஹி அம்மனை எந்தெந்த கிழமையில் வணங்கலாம்? கொடுத்த கடன் வந்து சேர வழிபாடு! பூஜை ரூமில் இப்படி வைங்க
சென்னை: வாராஹி அம்மன் சக்தி தேவியின் அம்சமாகவே கருதப்படுகிறார். வாராஹி அம்மன் துர்க்கை மற்றும் காளியைப் போன்ற உக்கிரமான தோற்றம் கொண்டவளாக இருந்தாலும், கருணையின் ஊற்றாக விளங்குகிறாள்.. எதிரிகளை அழிக்கும் திறன் கொண்டவளாகவும், ஆபத்துகளை, தீங்குகளை நெருங்க விடாமல் செய்பவளாகவும் வாராஹி அம்மன் திகழ்கிறாள்.. வாராஹியை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? யார் யார் வாராஹியை வணங்கலாம்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தன்னிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு, உடனடியாக அருளக்கூடியவள் வராஹி தேவி, தேவி புராணங்களின்படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் கருதப்படும் தெய்வமாகும்..

வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். பார்க்க கரடுமுரடான முகம் இருந்தாலும், பல நன்மைகளை தரும் சாந்த நாயகியே இந்த வாராஹி அம்மன். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சொல்வார்கள்..
அதனால்தான், பூஜையறையிலும் வாராஹி தேவியின் படத்தையோ, சிலையையோ வைத்து வணங்கலாம் என்பார்கள். ஆனால், வடக்கு திசையே வாராஹிக்கு உரிய திசையாகும்.. எனவே, வடக்கு நோக்கி வாராஹியின் முகம் இருக்கும்படி வைக்கலாம்..
வாராஹிக்கு செந்நிற மலர்கள் உகந்தவை என்பதால், செவ்வரளி, அரளி, செம்பருத்தி, ரோஜா போன்ற பூக்கள் கொண்டு வாராஹியை அலங்கரிக்கலாம்.
யார் யார் வாராஹியை வணங்கலாம்
கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்களும், மகரம், கும்பம் ராசிகளை கொண்டவர்களும், சனி திசையால் பாதிக்கப்பட்டவர்களும் வாராஹியை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வணங்கலாம்.
சேனநாதா, தண்டநாதா, வராஹி, பஞ்சமி, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீயாகும். ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, லகு வராஹி, மஹிஷாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி என அஷ்ட வராஹிகளாக அழைக்கப்படுகிறார்கள். .
கொடுத்த பணம் வந்து சேர உதவும்
எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் என எந்த துயரத்தையும் அண்ட விடாமல் செய்யக்கூடியவள் வாராஹி... கொடுத்த பணம் திரும்பி வராவிட்டாலும், வாராஹியை வணங்கி வேண்டினாலே, கையை விட்டு போன பணம், மீண்டும் வந்து சேரும் என்பார்கள்..
நெல்லை, திருவானைக்காவல் போன்றவை வாராஹியின் சிறப்பு தலமாக கருதப்படாலும், காசி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது. அதிலும் தஞ்சையில் முதல் பூஜை வாராஹி அம்மனுக்கே நடத்தப்படுமாம்.
பலன்கள், நன்மைகள்
வாராஹியை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முப்பிறவி கர்மாக்கள் அழிக்கப்பட்டுவிடும்.. எதிரிகள், விரோதிகள் நெருங்கமாட்டார்கள்.. செய்வினை மாந்திரிக தோஷங்கள் இருந்தாலும் விலகிவிடும்.. தொழிலில் ஏதாவது எதிர்ப்புகள், இழப்புகள், பாதிப்புகள், இருந்தாலும், விலகிவிடும்.
மாந்திரீகம் ஏவல்கள் பாதிப்புகளும் செயலிழந்துவிடும்.. நாள்பட்ட நோய்களும் குணமாகும்.. எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகளும் நெருங்காது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications