கூரைய பிச்சிட்டு பணம் கொட்ட.. வசம்பு வாசம் போதுமே.. பானையில் கல் உப்பை அள்ளி போட்டு மேஜிக்கை பாருங்க
சென்னை: வீட்டில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருப்பதால், வறுமை நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் தழைக்கும் என்று நம்பப்படுகிறது.. இதற்குரிய காரணத்தையும் நம்முடைய முன்னோர்கள் அன்றே எடுத்துரைத்திருக்கிறார்கள்.
வீடுகளில் வறுமை ஒழிந்து செல்வம் தழைக்கவும், பாசிட்டிவ் அதிர்வலைகள் வீடு முழுவதும் பரவவும், வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடங்களில் பணக்கஷ்டம் தீர வேண்டுமானால், மங்களகரமான பொருட்களை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

எனவே, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் பொருட்களை, தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வீட்டிற்குள் வைத்திருந்தாலே, குடும்பம் வறுமையிலிருந்து தப்பித்து, பண வரவையும் அதிகரித்து கொள்ளலாம் என்றும் ஆன்மீகத்திதில் சொல்லப்பட்டுள்ளது. அந்தவகையில், வசம்பு என்ற வாசனை மூலிகையை பரிகாரத்துக்கு பயன்படுத்தலாம்.
ஒரு மண் பானையில் கல் உப்பை நிரப்பி, அதில், ஒரு துண்டு வசம்புவை போட்டு, அதற்கு மேலும் உப்பைக் கொட்டி மூடிவிட வேண்டும்.. இந்த பாத்திரத்தில் 520 என்ற எண்ணை மேல்புறத்திலும், 741 என்று எண்ணை கீழ்புறத்திலும் எழுதி, இதனை யாரும் பார்க்காதவாறு, பூஜையறையில் கடவுள் படங்களுக்கு பின்புறம் மறைத்துவிட வேண்டும்.
மாதம் ஒருமுறை இந்த பானையை வெளியே எடுத்து, அதிலிருக்கும், உப்பு, வசம்பு இரண்டையும் எடுத்துவிட்டு, வேறு வசம்பு, உப்புவை மாற்றிவிட்டு, மறுபடியும் யார் கண்ணிலும் படாமல் வைக்க வேண்டும். இப்படி செய்துவரும்போது வீட்டில் பணம் தங்குதடையின்றி வந்து கொண்டே இருக்கும் என்று நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, நாம் செலவு செய்த பணமும் இரட்டிப்பாகிவிடுமாம்.
மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்புவிற்கு நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.. வசம்பிற்கும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம்.. எனவேதான், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்க சொல்கிறார்கள்.
எப்போதுமே பணப்பெட்டிகளை தென்மேற்கு மூலையில் வைத்து, அதன்மீது சிறிது மல்லிப்பூக்களையும் தூவினால், பணத்தட்டுப்பாடு வராது என்பார்கள். ஆனால், தினமும் பூ மாற்றிவிட வேண்டும்.. பூவை வாடிவிட கூடாது.
அதேபோல, பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் 6 வெற்றிலைகள், 3 பாக்குகளை சேர்த்து வைத்தால் பணம் பெருகிக் கொண்டே இருக்கும். அதேபோல, லவங்கப்பட்டையை பவுடர் போல பொடித்து, ஒரு பச்சை நிற துணியில் மடித்து, பச்சை நூலால் கட்டி, பணப்பை அல்லது பர்ஸிலோ வைத்து கொண்டால் பணம் தடையின்றி சேரும்.
செவ்வாய்க்கிழமை: அதேபோல, வீட்டின் தெற்கு பகுதியில் ஒரு காலியான இடத்தில், ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலை 6-7 மணிக்குள் 7 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி, ஆராதனை காட்டி உங்கள் குல தெய்வத்தையும், செவ்வாய் பகவானையும் மனதில் நினைத்து வணங்க வேண்டும்.
இதனால், நின்றுபோன கடன்தொகைகளும் உங்களை வந்து சேரும். சொத்துக்கள் சிக்கலும் விரைவில் தீரும்.. இதற்கு காரணம், வீட்டின் தெற்கு பகுதியானது, செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்தும் திசையாக கருதப்படுகிறது. இதனால் உங்களை நெருங்கும் தீமைகளையும் செவ்வாய் பகவான் அழித்துவிடுவார்
எப்போதுமே, நாம் சம்பாதிக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை சேர்த்து வைத்து, அதனை அன்னதானத்திற்காக செலவிட்டால்.., செலவிட்ட தொகையை போல் 5 மடங்கு கூடுதலான லாபம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.. அமாவாசை மற்றும் எம்முடைய முன்னோர்கள் இறந்த திதி ஆகிய நாட்களில் முன்னோர்களை மனதில் பிரார்த்தித்து குறைந்த பட்சம் 11 நபர்களுக்காவது அன்னதானம் அளித்தால், அதைவிட 11 மடங்கு கூடுதலாக பணம் கிடைக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications