முன்னோர்கள் போட்டோவை கிச்சனில் வைக்கலாமா? இறந்தவர் கனவில் அழுகிறாரா? இந்த அறிகுறி தெரிந்தால் ஜாக்கிரதை
சென்னை: முன்னோர்களின் போட்டோக்களை வீட்டில் வைக்கும்போது, கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள். அதுமட்டுமல்ல, குடும்பத்தில் இறந்தவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்களா? என்பதை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள்.
குடும்பத்தில் இறந்த பெரியவர்களின் போட்டோக்களை வீடுகளில் மாட்டி வைத்திருப்பார்கள்.. ஆனால், இந்த போட்டோக்களை வைக்கும்போது, சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் போட்டோக்களை வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறையான சக்தியை உண்டுபண்ணிவிடுமாம். வீட்டின் தம்பதிகள் படுக்கும் அறையிலும், இறந்தவர்களின் போட்டோக்களை வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், தம்பதிக்குள் பூசல்கள் வெடித்து, சண்டைகள் பெருகிவிடும். இறுதியில் தம்பதிகள் பிரியவும் நேரிடலாம். அதேபோல, இறந்தவர்கள் அல்லது முன்னோர்களின் போட்டோக்களை கிச்சனிலும் வைக்கக்கூடாது. சமையலறையில் வைத்தால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்.

இறந்த நபர்கள்: அதேபோல, உயிருடன் இருக்கும் நபர்களுடன், இறந்த நபர்களின் போட்டோக்களையும் சேர்த்து தொங்கவிடக்கூடாது... இதனால் குடும்பத்தில் பல சிக்கல்கள் எழலாம். நடுவீட்டிலும் இறந்தவர்களின் போட்டோக்களை மாட்டி வைக்கக்கூடாது.
வீட்டின் தெற்கு திசை, எப்போதுமே எமனுக்குரியது.. எனவே, முன்னோர்களின் போட்டோவை எப்போதும் வடக்கு திசையில் வைக்க வேண்டும். தெற்கு நோக்கியே முன்னோர்கள் உள்ளதால், வடக்கு திசையே போட்டோக்களுக்கு உகந்தது. ஆனால், எக்காரணம் கொண்டும், இந்த போட்டோக்கள் கீழே விழும்படி மாட்டி வைக்கக்கூடாது.
பிரதான கதவு: வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னோர்களின் படங்களையும் வைக்கக்கூடாது. வீட்டிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பார்க்கக்கூடிய இடத்தில் அவர்களின் போட்டோவை வைக்க வேண்டும். ஆனால், எக்காரணம் கொண்டும் பிரதான கதவில் வைக்கக் கூடாது. காரணம், வெளியாட்களின் பார்வை முன்னோர்கள் மீது படும்போது, வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் பெருகலாம். அதேபோல, இறந்தவர்கள் அல்லது முன்னோர்களின் ஆசீர்வாதம் குடும்பத்துக்கு எப்போதும் தேவை என்று அனைவருமே விரும்புகிறார்கள். எனினும், முன்னோர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக கோபமாக இருந்தால், குடும்பத்தில் பல சிக்கல்கள் வரலாம் என்றும் அச்சப்படுகிறார்கள்.
கோபம்: அதனால்தான், சில அறிகுறிகளை வைத்து, இறந்த முன்னோர்கள் கோபமாக இருப்பதை அறிந்து கொள்ள முடியும், இதனை வைத்து, முன்னோர்களின் கோபத்தை தணித்து, அவர்களின் ஆசீர்வாதத்தையும் அபரிமிதமாக பெறவும் முடியும் என்றும் வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
உதாரணத்துக்கு இறந்த நபர்கள் அடிக்கடி கனவில் வரக்கூடாதாம்.. அடிக்கடி முன்னோர்கள் கனவில் வருவதும், அவர்கள் அழுவதும் மிக மிக மோசமான சகுனம் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்து அழுதால், அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.. அதேபோல, பண்டிகை அல்லது சுப காரியங்களில் இடையூறுகள் வந்தாலோ அல்லது கெட்ட காரியம் ஏதாவது நடந்துவிட்டாலோ, உங்கள் மீதான முன்னோர்களின் கோபத்தையே குறிக்கிறதாம்.
சாப்பாட்டு தட்டில் முடி: பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காமலேயே இருப்பதும், குழந்தை பிறக்காமல் இருப்பதும்கூட முன்னோர்களின் கோபத்தையே குறிக்கிறதாம். வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத அளவுக்கு பயத்திலும், அச்சத்திலும் குடும்ப உறுப்பினர்கள் உறைந்திருந்தால், அதுவும் முன்னோர்களின் கோபத்தின் அறிகுறியாகும்... அதேபோல, சாப்பிடும்போது, தட்டில் அடிக்கடி தலைமுடி இருந்தாலும், வீட்டில் துர்நாற்றம் வந்து கொண்டேயிருந்தாலோ முன்னோர்களின் கோபத்தை குறிப்பதாக அர்த்தமாம்..!!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications