வாஸ்து டிப்ஸ்..உங்க வீட்ல டாய்லெட், பாத்ரூம்..இந்த திசையில் கட்டாதீங்க..கஷ்டம் வந்து விடுமாம்
சென்னை: உங்களுடைய வீட்டில் சரியான திசையில் வைக்கப்படும் பொருட்களும், சரியான திசையில் கட்டப்படும் அறைகளும் நன்மையையும் செல்ல வளத்தையும் கொடுக்கும். பழைய காலங்களில் வீட்டிற்கு வெளியே டாய்லெட், பாத்ரூம் கட்டுவார்கள். இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கு உள்ளேயே கழிவறை, குளியலறை இணைந்து பெட்ரூமிற்குள் கட்ட வேண்டியுள்ளது. வாஸ்துபடி நம்முடைய வீட்டில் எந்த திசையில் பாத்ரூம் கட்ட வேண்டும் எந்த திசையில் கட்டக்கூடாது என்று பார்க்கலாம்.
கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு ஆகிய நான்கு திசைகளைப் போல வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு தென் மேற்கு ஆகிய திசைகளிலும் நாம் எந்த அறைகளை கட்ட வேண்டும் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்று வாஸ்துப்படி சரியாக அமைக்க வேண்டும்.

ஒருசிலர் இடம் இருக்கிறதே என்று வடகிழக்கு பகுதியில் குளியலறையுடன் கூடிய கழிவறையை கட்டுவார்கள். அது மிகவும் தவறான செயல். வடகிழக்குப் பகுதி இறைவன் வசிக்கும் பகுதி. வடகிழக்கு மூலை பகுதியில் ஒருபோதும் கழிவறை, குளியலறையை கட்டக்கூடாது. வடகிழக்கில் அறை இருந்தாலும் அந்த இடத்தில் குளியலறை, கழிப்பறை கட்டக்கூடாது.
கழிப்பறை, குளியலறையில் வாஸ்து பிரச்னை இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது குடும்ப தலைவன் தான். கழிப்பறையிலிருந்து வரக்கூடிய கழிவுநீர் உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறை, சமையலறை, படுக்கை அறைக்கு கீழே கடந்து செல்லாதவாறு அமைக்க வேண்டும். வீட்டின் மையத்தில் அல்லது வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலைகளில் கழிப்பறை வரும் வகையில் வீடு கட்டுவதைத் தவிர்க்கவும்.
வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் படுக்கை அறை இருந்தால் அங்கு இணைப்பாக குளியலறை, கழிப்பறை கட்டலாம். கழிப்பறையில் கோப்பையை வடக்கு தெற்கு திசைகளை நோக்கி வைக்க வேண்டும். கழிப்பறை கோப்பைகளை ஒருபோதும் கிழக்கு மேற்கு நோக்கி அமரும் வகையில் அமைக்கக்கூடாது.
தென்கிழக்கு அக்னி மூலையிலோ, தென்மேற்கு கன்னி மூலையிலோ கழிப்பறை, குளியலறை வரும் வகையில் கட்டக்கூடாது. வாஸ்து படி, சமையலறைக்கு எதிரே அல்லது அதற்கு அடுத்ததாகக் குளியலறை, கழிப்பறை இருக்கக்கூடாது.
குளியலறையில் உள்ள தண்ணீர் வாளி அல்லது தொட்டி எப்போதும் குளியலறையில் நிறைந்திருக்க வேண்டும். வாளி காலியாக இருந்தால், அதை கவிழ்த்து வைக்க வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் கொடுக்கும்.
குளியலறையில் ஒரு ஜன்னல் அவசியம் வைக்கவேண்டும். இதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வெளியேறுகிறது. ஜன்னல் கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு நோக்கி திறக்கப்பட வேண்டும்.

குளியலறை, கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல்,மகிழ்ச்சியையும் நிதி நிலைமையையும் பாதிக்கும். வீட்டில் அனைவரும் குளித்து முடித்த குளியலறை கதவை திறந்து வைக்க வேண்டும். ஈரம் காய்ந்த பின்னர் குளியலறை கதவை மூடி விட வேண்டும்.
ஒரு வீட்டில் தென் மேற்கு மூலையும் வடகிழக்கு மூலையும் எவ்வளவுக்குச் சரியாக வாஸ்துபடி அமைகிறதோ அந்த அளவுக்கு அந்தக் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழ்வார்கள் எனவே தவறியும் கூட இந்த இடத்தில் பாத்ரூம், கழிவறை கட்டி விடாதீர்கள்.












Click it and Unblock the Notifications