கதவை திறங்கள் காற்று வரட்டும்.. ஜன்னலை பூட்டி வைக்காதீங்க பணம் வீட்டில் தங்காது.. வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நம்முடைய வீட்டில் ஜன்னல் அமைப்பது காற்றுக்காக மட்டுமல்ல. அது வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கும். எந்த திசையில் எந்த மூலையில் ஜன்னல் அமைக்கலாம் எந்த மூலையில் ஜன்னல் அமைக்கக் கூடாது என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நம்முடைய வீட்டில் ஒவ்வொரு அறையிலும் என்ன பொருட்களை வைக்க வேண்டும் என்ன பொருட்களை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். கதவு, தலைவாசல் போன்றவைகளை எந்த மூலையில் வைக்க வேண்டும் எந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையில் தலைவாசல் வைக்க வேண்டும் என்று படித்திருப்போம். அதே போல ஒரு வீட்டில் வைக்கும் ஜன்னலுக்கும் வாஸ்து உள்ளது.

Vastu tips for Jannal: Jannal Vastu tips in Tamil

நம்முடைய வீட்டின் எந்த எந்த திசையில் என்ன அளவில் ஜன்னல்கள் வைத்தால் செல்வம் வீட்டில் வந்து சேரும், அந்த பணம் வீட்டில் தங்குமா? அல்லது செலவாகி விடுமா? விரைய செலவு வருமா என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக வடக்கு திசையில் நாம் கண்டிப்பாக ஜன்னல் வைக்க வேண்டும். அப்படி வைக்கப்படும் ஜன்னல் திறந்தே இருக்க வேண்டும். இதனால் பல வழிகளில் செல்வம் பெருகும்.

வடக்கு திசையில் கதவு இருந்தால் மட்டும் போதாது நிச்சயம் ஜன்னல் இருக்க வேண்டும். அப்படி இல்லாத வீட்டில் ஒருபோதும் குடியிருக்கக்கூடாது. அது வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆகாது. அந்த வீட்டில் செல்வம் தங்கவே தங்காது. அதே போல சூரியன் உதிக்கும் கிழக்கு திசையில் கண்டிப்பாக ஜன்னல் இருக்க வேண்டும். அந்த ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சூரிய ஒளி ஊடுருவ வேண்டும். கிழக்கு திசையில் ஜன்னல் இல்லாத வீடு பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜன்னல் இருந்தால் மட்டும் போதாது அந்த ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். ஒரு சிலர் ஜன்னலை பூட்டியே வைத்திருப்பார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் கிழக்கு திசையில் ஜன்னல் இல்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம். இன்றைய அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரத்தில் பல வீடுகளில் ஜன்னல் என்ற ஒன்று இருப்பதே அரிதாக இருக்கிறது. அதுவும் கிழக்கு, வழக்கு திசையில் ஜன்னலை எதிர்பார்ப்பது கடினம்தான். இருந்தாலும் உங்களுக்கான ராசியான வீடாக ஜன்னல் உள்ள வீடாக பார்த்து குடியேறுவதே நல்லது.

ஜன்னல் இருந்தாலும் அதை பூட்டியே வைத்திருப்பது பாதிப்பைதான் கொடுக்கும். கொசு, பூச்சிகள் வரும் என்று நினைப்பவர்கள் அதற்கேற்ப வலைகளை அடித்து விடுவது நல்லது. அதுதான் காற்றோட்டத்தை கொடுக்கும். சமையல் அறையில் வடக்கு, கிழக்கு நோக்கிய திசையில் ஜன்னல் இருப்பது அவசியம்.
சூரிய ஒளி கண்டிப்பாக சமையல் அறைக்குள் வருவது அவசியம்.

வடக்கு, வடமேற்கு பகுதிகளில் ஜன்னல் வைப்பது போல அதே போல வடகிழக்கு எனப்படும் ஈசான்ய மூலையை நாம் ஒருபோதும் அடைத்து வைக்கக்கூடாது. ஈசான்ய மூலை வழியாக வரும் காற்று அதிர்ஷ்டத்தை தரும். நாம் ஒருபோது ஈசான்ய மூலையில் உள்ள ஜன்னலை அடைக்கவே கூடாது. அது அந்த வீட்டின் நேர்மறை சக்தியை பாதிக்கும்.

சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பார்கள். அது தவறாகும். ஈசான்ய மூலை அடைபட்டால் அந்த வீட்டில் உள்ளவர்கள் அடிக்க நோயினால் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் பழங்காலத்தில் பெரும்பாலும் பூஜை அறை, பெரியவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றை ஈசானிய மூலையில் அமைத்தனர்.

அறிவியல் ரீதியாக வடகிழக்கு, தென்மேற்கு திசைகளில்தான் அதிக ஆக்சிஜன் வாயு அதிகம் கிடைக்கிறது. எனவே நாம் ஈசான்ய மூலையில் வைக்கும் ஜன்னலால் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதே போல குபேர மூலை எனப்படும் தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது நல்லது. அந்த மூலையில் ஜன்னல் அமைத்தால் அது வீண் விரைய செலவுகளை கொண்டு வரும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+