லட்சுமி வாசம் செய்யும் சமையல் அறை.. எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ்
சென்னை: பெண்கள் ஆட்சி செய்யும் இடம் சமையல் அறை, மகாலட்சுமி வாசம் செய்யும் இடமும் அதுதான். நம்முடைய வீட்டில் வசிக்கும் அனைவரின் ஆரோக்கியத்திலும் சமையல் அறைக்கு முக்கிய பங்கு உண்டு. நம்முடைய வீட்டில் சமையல் அறை வாஸ்து படி எப்படி எங்கு இருந்தால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும் என்று பார்க்கலாம்.
பொதுவாகவே எல்லா வீடுகளிலும் அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு பகுதியில்தான் சமையல் அறை வைத்திருப்பார்கள். தெற்கு பார்த்த வாசல் அமைந்திருக்கும் வீடுகளில் வட மேற்கில் வைத்திருப்பார்கள். சமையல் அறை வைக்க சரியான இடங்கள் இதுதான். குடும்பத்தில் முன்னேற்றமும் செல்வ வளமும் அதிகரிக்கும். அடுப்பு வைக்கும் மேடை தெற்கு சுவரையும் கிழக்கு சுவரையும் இணைக்கும் வகையில் வைக்க வேண்டும். சூரியனின் ஒளிக்கதிர்கள் சமையல் அறைக்குள் விழும் வகையில் கிழக்கு பகுதியில் ஜன்னல் அமைப்பது சிறப்பு.

சமையல் அறையை ஈசான்யம் எனப்படும் வடகிழக்கில் அமைத்திருந்தால் அந்த வீட்டின் அமைதி கெடும். சமையல் செய்பவரின் உடல்நிலை, குடும்ப தலைவரின், குடும்ப தலைவியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படும். தெற்கு பகுதியில் சமையல் அறை அமைத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் சமையல் அறை அமைத்தால் தொடர் வியாதிகள் பீடிக்கும். மேற்கு பகுதியில் சமையல் அறை அமைத்தால் பிரச்சினைகள் தொடர்கதையாகும்,
சமையல் அறையில் மிக முக்கியமான ஒன்று அடுப்பு ஆகும். அடுப்பு என்பது பரணி நட்சத்திர குறியீடு. பரணி நட்சத்திர அதிபதி சுக்ரன். இந்த பரணி நட்சத்திரம் மேஷம் எனும் நெருப்பு ராசியில் இடம்பெறும். கிழக்கு பார்த்து நின்றுதான் சமையல் செய்ய வேண்டும். சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்கிறாள். சமையற்கட்டை சுத்தமாக வைத்தால் அங்கு லட்சுமி வாசம் செய்வாள். இதை மூத்தவர்கள் முன்னோர்கள் சொல்வார்கள்.

சமையல் அறை சுத்தமாக இருக்கும் வீட்டில் எப்போதுமே பணக்கஷ்டம் வர வாய்ப்பில்லை. சமையல் அறைக்குள் செல்லும் போது குளித்து சுத்தமாகத்தான் செல்வார்கள். இன்றைய சூழ்ந்நிலையில் பலரும் படுக்கையில் இருந்த எழுந்த உடனேயே சமையல் அறைக்கு செல்கின்றனர்.
அஞ்சறைப்பெட்டியில் மகாலட்சுமியும் ஊருகாய் ஜாடியில் குபேரனும், உப்பில் அன்னை லட்சுமியும் வசிக்கிறார். எனவே நாம் சமையலுக்கு உபயோகிக்கும் போது சுத்தமாகவே எடுத்து பயன்படுத்த வேண்டும். அரிசியில் சிவனும் பெருமாளும் வசிக்கின்றனர். துவரம்பருப்பில் செவ்வாய் பகவான் வசிக்கிறார் என்பது ஐதீகம்.
சமைத்து முடித்த சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை சிங்கிள் போட்டு விட்டு அப்படியே தூங்க போய் விடக்கூடாது அதன் மூலம் அந்த வீட்டில் சனியின் ஆதிக்கம் அதிகரித்து விடுமாம். எனவே சமையல் பாத்திரங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு சமையல் அறை மேடையையும் சுத்தம் செய்த பின்னரே உறங்க செல்ல வேண்டும்.
சமையல் அறையில் தென்மேற்கு மூலை எனப்படும் கன்னி மூலையில் ஒரு சாமி படத்தை வைத்து விளக்கேற்றி வைக்கலாம். நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்கும். ஒருவருக்கு திடீர் என பொருளாதாரத்தில் சிக்கல், நோய் பாதிப்பினால் மருத்துவ செலவு வருகிறது என்றால் சமையல் அறையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி சுத்தமாக இருந்தால் தான் லட்சுமி வாசம் செய்வாள். அழகான மாளிகை, வாசனையான இடங்களில் சுக்ரன் வாசம் செய்வார். நம்முடைய வீட்டின் சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வோம் லட்சுமி நிரந்தரமாக குடியேறுவாள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications