7 குதிரை வாசலில்.. இந்த ஒரு பொருள் தலைவாசலில் போதும்.. மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீட்டில் எப்போதும் தெய்வீகத் தன்மை நிறைந்து காணப்பட வேண்டுமானால், எதிர்மறை ஆற்றல்கள் சிறிதும் வீட்டில் தங்காமல், நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைய வேண்டும்.. அந்தவகையில் வீட்டின் நுழைவாயில்கள் மிகவும் முக்கியம்.. வீட்டின் உயிர்மூச்சே நுழைவாயில்தான்.. இந்த நுழைவாயிலில் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? வாஸ்து பரிகாரங்கள் உள்ளனவா? இவைகளை சுருக்கமாக பார்க்கலாம்.
வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றல்கள் தங்கியிருக்க, பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வருவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.. இதனால், லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கியிருந்து அருள் புரிவாள்.

மஞ்சள், குங்குமம், உப்பு,
பெரும்பாலும், வெள்ளிக்கிழமைகளில் நிலைவாசல் கதவில் சந்தனம், குங்குமமிடுவார்கள்.. இதை தவிர்க்க வேண்டும்.. எப்போதுமே வியாழக்கிழமை மாலையில் நிலை வாசலுக்கு குங்கும பொட்டு வைப்பது தான் முறையாகும்.. வாயில் கதவில் "சுவஸ்திக்" சின்னம் அல்லது "திரிசூலம்" சின்னத்தை வரைந்து வைக்கலாம். கதவு பகுதியில் ஓம் சின்னம் வரையலாம்.
நிதி நிலைமையில் சிக்கி தவிப்பவர்கள், ஒரு பருத்தி துணியை மஞ்சளில் தோய்த்து எடுத்து கொள்ள வேண்டும், பிறகு பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை, அந்த மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் சிறிது நாணயங்களையும் வைத்து கட்டி, முடிச்சு போல கட்டி வீட்டு வாயிற்படியில் கட்டி வைக்கலாம். இதனால் பொருளாதார பிரச்சனை சீராகும்.
படிகார கற்கள்
அதேபோல, வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து மீண்டும் தெய்வத்தை வணங்கி, பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி , அதை வீட்டின் வாசலில் இரண்டு பக்கமும் வைத்து விட வேண்டும். இதனால், எப்பேர்ப்பட்ட கஷ்டமும் வீட்டிற்குள் நுழையாது. அதேபோல, ஒரு படிகாரம் கல்லை, கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்கவிடலாம். இதனால், வீட்டில் எதிர்மறை நுழையாமல் தடுக்கப்படும்.
சிவன் கோவில்களில் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற விபூதியை கொண்டு வந்து, வீட்டின் வெளிப்புற வாயில் பகுதியின் இரண்டு புறமும் சிறிதளவு போட்டு வைக்கலாம். மஞ்சள் கிழங்கு மாலையை வாசலில் இருபுறமும் கட்டி வைக்கலாம்.
7 குதிரை படங்கள்
வீட்டின் வாசலின் 2 பக்கத்திலும், மரம் அல்லது மண் கொண்டு செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைத்தால் மங்கலம் உண்டாகும்.. அந்த வீட்டில் உள்ளவர்களின் வாழ்வில் நலம் உண்டாகும். அதேபோல, வீட்டு நிலைவாசல் படியின் மேலே குதிரை படத்தை மாட்டி வைக்கலாம். ஆனால், இந்த குதிரை ஒன்று அல்லது 7 குதிரைகள் இருக்கின்ற வகையான படமாக இருக்க வேண்டும். அதேபோல, வண்டி இழுக்கும் குதிரையின் காலில் இருந்து கழண்ட பழைய குதிரை லாடத்தையும் மாட்டி வைக்கலாம்.
வலம்புரி சங்கு தரும் நன்மைகள்
வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் வராது என்பது ஐதீகம். வீட்டின் மீது எவருடைய கண் திருஷ்டியும் படாது. ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விட்டால், குறைகள் இல்லாத வாழ்க்கை அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதுமட்டுமல்ல, வலம்புரிச் சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும்.. சொந்தமாக தொழில் செய்பவர்களும், வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் விருத்தியடைவதுடன், பணம் தங்குதடையின்றி புரளும்.
விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை வைப்பது, வாஸ்து குறைகளை போக்கும்.. அதேபோல, வீட்டிற்கு முன்புள்ள சுவர் அல்லது கதவில் செம்புக் கம்பியால் செய்யப்பட்ட "ஓம்" என்கிற பிரணவ மந்திர வடிவத்தை மாட்டி வைப்பதால், குடும்பத்துக்கு நன்மையும், பாதுகாப்பும் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications