தனுஷ், சிவகார்த்திகேயன் மாதிரி.. கருங்காலி மாலையை அணிந்தால் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்?
சென்னை: கருங்காலி மாலைகளை இப்போது எல்லோரும் அணியத் தொடங்கி விட்டனர். சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் கருங்காலி மாலைகளை அணிவதைப் பார்த்து பலரும் அணியத் தொடங்கி விட்டனர். எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலையை அணியலாம். கருங்காலியின் சிறப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கருங்காலி மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை கோவில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள். அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும் இது பழங்கால கோயில்களில் உணரலாம்.

கருங்காலி மரம் மருத்துவ குணம் கொண்டது. அந்த மரத்தின் வேர், பட்டை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. கருங்காலி மரத்தின் பட்டையை அரைத்துக் கொடுத்தால் ரத்தம் தொடர்பான நோய்களிலிருந்து விரைவில் நலம் பெறலாம் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. வயிற்றுவலி, நீரிழிவு, உடற்சோர்வு உள்ளவர்களுக்கு கருங்காலி வேர் குடிநீர் அருமருந்தாக உள்ளது.
கிரகம் சரியில்லை என்று உடல் நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்கள் சரியதாக கருங்காலி கட்டையை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்து முகத்தை கழுவி விட்டு கட்டையை மூன்று முறை மெதுவாக தட்டி வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும். மன சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் கருங்காலி கட்டைகளை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம் தெரியும். இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.
கருங்காலி மரம் முருகனுக்கு மிக உகந்த மரம். செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை கொண்டது. இந்த மரம் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள், மிதுனம், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி மற்றும் விசாகம் நட்சத்திரத்தில் கேட்டை பிறந்தவர்களுக்கு இது உகந்த மரம். இந்த மரத்தை வீடுகளில் வளர்க்கலாம் மரம் வளர வளர உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கருங்காலி மாலைகளை அணிந்தால் அதிர்ஷ்டமும் செல்வ வளமும் தேடி வரும் என ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
கருங்காலி மரத்திற்கு எதிர்மறை சக்தியை அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள், குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள் தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கவும் இந்த மரங்களில் செய்த பொம்மையை குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தனர்.
அந்த காலத்தில் பெரும் செல்வந்தர்கள் கருங்காலி மரத்தால் ஆன வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தினார்கள். இப்போதும் கூட அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கைகளில் கருங்காலி குச்சியை வைத்துக்கொண்டு வாக்கிங் செல்கின்றனர். இதற்குக் காரணம் கெட்ட ஆத்மா தன்னை பின் தொடராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நம்முடைய வீடுகளில் தானியங்கள் குத்தும் உலக்கையும் கருங்காலி மரத்தால் செய்து வைத்திருப்பார்கள். உலக்கை நம்முடைய வீட்டில் இருப்பது பாதுகாப்பானதாக கருதப்பட்டது. இளம் பெண்கள் வயதுக்கு வந்தால் தாய்மாமன்கள் சேர்ந்து சீர் செய்து உலக்கையை அந்த பெண்ணின் முன்பாக வைப்பார்கள். இதன் மூலம் தீய சக்திகள் எதுவும் அந்த பெண்ணை தாக்காது என்பது நம்பிக்கை.
கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வ சக்தி இருக்கும் நல்ல தரமான உன்மையான கருங்காலி மாலைகள் குச்சிகள் விக்ரகங்கள் திரிசூலங்கள் வாங்கி வைக்கலாம் பண வரவு செல்வ வளம் அதிகரிக்கும். கருங்காலி குச்சி, கருங்காலி மாலை வைத்திருப்பவர்களுக்கு குல தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications