வாஸ்து.. பூஜை அறையில் காளி, துர்க்கை.. உக்கிரமான சாமி படங்கள் வைக்கலாமா? எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?
சென்னை: நம்முடைய வீட்டு பூஜை அறையில் நாம் இறைவனின் திரு உருவப்படங்களை வைத்து சாமி கும்பிடுவோம். பூஜை அறையில் என்ன சாமி படங்களை வைக்கலாம்? காளி, துர்க்கை, பைரவர் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன என்று பார்க்கலாம்.
பூஜை அறை: பொதுவாக வீட்டில் ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைப்பது சிறப்பு. அப்படி அமைக்க முடியாதவர்கள் தென்மேற்கில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம். இப்படி அமைத்து கொண்டால், உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பூஜை அறைக்கு மிகப்பொருத்தமான இடம் எது எனில் தென்மேற்கு மூலைதான். வாஸ்துவின்படி வாஸ்து பகவான் வடகிழக்கில் தலை வைத்து தென் மேற்கில் கால் வைத்துப்படுத்து இருப்பதாக சொல்கிறோம்.

தவறான செயல்: சில வீடுகளில் தென்மேற்கு மூலையில் வாஸ்துப்படி சரியாக படிக்கட்டுகள் அமைத்து மேல் தளத்திற்கு செல்லும்படி அமைத்து விட்டு அந்த படிக்கட்டுகளுக்கு கீழே தரைத்தளத்தில் பூஜை அறை அமைப்பார்கள். இது முற்றிலும் தவறு. எப்போதும் எந்த இடமானாலும் படிக்கட்டுகளுக்கு கீழே பூஜை அறை அமைப்பது கூடவே கூடாது. அது அந்த வீட்டின் மகிழ்ச்சியை கெடுத்து விடும். சண்டை சச்சரவை அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க காரணமாகும்.
பூஜையில் தீபங்கள்: பூஜை அறையில் முக்கியமாக சில விசயங்களை செய்ய வேண்டும். நம் வீட்டு பூஜை அறை சுத்தமாக இருக்க வேண்டும். கண்ட குப்பைகளை போட்டு வைக்கக் கூடாது. மறந்தும் கூட நம்முடைய வீட்டின் பூஜை அறையில் சில படங்களை வைத்து வணங்கக் கூடாது. அதே போல கோவிலில் மட்டுமே ஏற்றக்கூடிய தீபங்களை நம்முடைய வீட்டில் ஏற்றக்கூடது என்று ஆன்மீக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
எள் தீபம் ஏற்றலாமா: அகோர தெய்வங்களின் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. துர்க்கை படத்தையோ, அகோர காளி படத்தையோ வீட்டின் பூஜை அறையில் வைத்து எலுமிச்சசை தீபம் ஏற்றுவார்கள். அதே போல எள் தீபத்தையும் வீட்டில் ஏற்றக்கூடாது. சிலர் பரிகாரத்திற்காக எள், எலுமிச்சை தீபம் ஏற்றச் சொல்லி ஜோதிடர்கள் கூறியிருப்பார்கள்.
எலுமிச்சை தீபம்: கோவிலுக்கு போக முடியாத நேரங்களில் நம்முடைய வீட்டு பூஜை அறையை கோவிலாக நினைத்து நைவேத்தியம் செய்து வழிபடுவோம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் எலுமிச்சை தீபத்தை வீட்டில் ஏற்றுவார்கள். அது சிறப்பானதல்ல.
சிலர் எத்தனையோ சாமி படங்களை இஷ்ட தெய்வங்களை வைத்து வழிபடுவார்கள். குல தெய்வ படம் முக்கியமாக பூஜை அறையில் இருக்க வேண்டும்.
பூஜை அறையில் இருக்கக்கூடாது: நம்முடைய பூஜை அறையில் புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன்படம், விக்கிரகம் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். குல தெய்வ படம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அகோர தெய்வங்களின் படங்களை வைக்கக் கூடாது. அது போல கால் தூக்கி நடனமாடும் நடராஜர் படத்தையும் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications