ஓடாத கடிகாரம்.. உடைந்த கட்டில் உங்க வீட்ல இருக்கா உடனே தூக்கி போடுங்க.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீடு என்பது நேர்மறை சக்திகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்திருக்கும். ஒரு சிலர் உடைந்த பொருட்களைக்கூட காட்சிப்பொருட்களாக வைத்திருப்பார்கள். ஓடாத கடிகாரம், பாடாத ரேடியோ என்று பல பொருட்களை வீட்டிற்குள் வைத்திருக்காமல் தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள். வாஸ்து படி நம்முடைய வீட்டில் என்ன பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
நம்முடைய வீட்டை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் செல்வ வளம் தரக்கூடிய மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைக்கும். முதலில் நமது வீட்டை இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதுவே வீட்டை வளமாக வைத்திருக்கும்.

நாம் வீடு நிறைய கண்ட சாமான்களை போட்டு வைத்திருக்கக்கூடாது. அதுவே சிக்கலாகி வீட்டிற்குள் எதிர்மறை சக்தியை அதிகரித்து விடும். ஒருசிலரின் வீட்டில் கண்ட சாமான்களை போட்டு வைத்திருப்பார்கள். பழங்கால பொருட்களை வைத்திருப்பது தவறில்லை. அதுவே உடைந்த பொருட்கள் இருந்தால் அதை வீசி விடுங்கள். இல்லாவிட்டால் எடைக்கு போட்டு விடுங்கள்.
உடைந்த பொருட்கள் எதையும் வைத்திருக்காதீர்கள். ரிப்பேர் ஆன ஃபேன், உடைந்த கட்டில், நாற்காலி. சைக்கிள் போன்றவை வைத்திருக்காதீர்கள்.
பழைய சாமான்களை வாங்குபவர்களிடம் எடைக்கு போட்டு விடுங்கள்.
வடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு இருப்பது. நான்கு புறமும் சுற்றுச்சுவர் இல்லாத அமைப்புகள், வடகிழக்கில் வடக்கு பக்கம் சாளரம் இல்லாத அமைப்பு வருவது. வடகிழக்கில் கிழக்கு பக்கம் சாளரம் இல்லாத அமைப்புகள் வந்தாலும் பணத் தட்டுப்பாடு பெருகும்.
வடகிழக்கில் ஈசான்ய மூலையில் நாம் செய்யும் சில தவறுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வட கிழக்கு பகுதியில் ஜன்னல் இருந்தாலும் அதை சிலர் மூடியே வைத்திருப்பார்கள். அது தவறு. வடகிழக்கில் இருந்து காற்றும் ஒளியும் வீட்டிற்குள் நுழைய வேண்டும். வடகிழக்கு பகுதியில் தவறியும் கூட சமையல் அறை வைத்திருக்கக் கூடாது. வடகிழக்கில் கழிப்பறை, சமையல் அறை வைத்திருப்பது தவறு. அந்த வீட்டில் செல்வம் தங்கவே தங்காது.
வடகிழக்கில் இருந்து சூரிய ஒளி வீட்டிற்கு வர வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நாம் தெற்கு பார்த்து அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் வடக்கு பார்த்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து அமிர்தமே உண்டாலும் அது உடம்பில் சேராது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். பூஜை - வடக்கு, போஜனம் - தெற்கு என்பது வாஸ்துப் பழமொழி.
அதற்கு அர்த்தம் நாம் பூஜை அறையில் சாமி படங்களை கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து அமைத்து, நீங்கள் வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து இருந்து வழிபாடு செய்யுங்கள். நிறைவான வாழ்க்கை அமைய வேண்டும் எனில் நாம் தென்மேற்கு மூலையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவது சிறப்பு.
பூஜை அறையில் நெய்தீபம் வடக்கு பார்த்து ஏற்றி வைத்து வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications