முகம் பார்க்கும் கண்ணாடி...வீட்டில் தவறாக மாட்டினால் விளைவுகள் அதிகமாகும்..வாஸ்து டிப்ஸ்
சென்னை: கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவேதான் கோவில் விஷேசங்கள், வீட்டு விஷேசங்களில் பங்கேற்க வருபவர்களுக்கு கண்ணாடியை பரிசாக தருவார்கள். நம்முடைய வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை நாம் எந்த திசையில் மாட்டி வைத்திருக்கிறோம் எப்படி பராமரிக்கிறோம் என்பதை பொறுத்து நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும். பொருளாதார நிலையும் உயருமாம். வாஸ்து சாஸ்திரப்படி நாம் கண்ணாடியை எங்கு எப்படி வைக்க வேண்டும் என்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. அது குறித்த தொகுப்பினை பார்க்கலாம்.
நீரில் முகம் பார்த்து அழகுப்படுத்திக்கொண்டவர்கள் கண்ணாடியை பார்க்கத் தொடங்கினர். கண்ணாடி அழகினை காட்டும் பொருள் மட்டுமல்ல ஜோதிட சாஸ்திரப்படி அது சுக்கிரன், மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. இன்றைக்கு விதம் விதமான கண்ணாடிகள் வந்து விட்டன. கண்ணாடி நமது பிம்மத்தை எதிரொலிக்கும். நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.

நம்முடைய வீட்டிற்கு கண்ணாடி வாங்கும் போது சூரியன் இருக்கும் பகல் நேரத்தில்தான் வாங்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு ஒருபோதும் கண்ணாடி வாங்கக் கூடாது. கண்ணாடியின் பிரேம் பொதுவாக இள நிற வண்ணங்களில் இருப்பது சிறப்பானது. சந்தன நிறம், வெண்மை, இளம் சிவப்பு, இளம் பச்சை நிற பிரேம்கள் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
கண்ணாடியை நாம் அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். ஒருபோதும் கவனக்குறைவாக கையாண்டு அதை உடைத்து விடக்கூடாது. வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி உடைவது நல்லதல்ல. ஏதோ ஒரு தவறு நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறியாகும். வாஸ்து சாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடியை சரியான திசையில் மாட்ட வேண்டும்.
நம் வீட்டில் இருக்கும் கண்ணாடியை சரியான இடத்தில், சரியான திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும். கண்ணாடியானது நல்ல சக்தியை வரவேற்கும் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றகள் அதிகரிக்காத வகையில் கண்ணாடியை சரியான திசையில் மாட்டி வைப்பது அவசியம். செல்வ வளம் பெருகவும் வீட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி தவிர்க்கவும் கண்ணாடியை சரியான திசையிலும் சரியான இடத்திலும் மாட்டி வைக்க வேண்டும்.
பொதுவாக நம்முடைய வீட்டில் மேற்கு திசை, அல்லது தெற்கு திசையை பார்த்து நமது முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைக்கலாம். டைனிங் டேபிள் அருகில் பின்னாடி உணவுகளை பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை மாட்டி வைக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு பார்த்த திசையில் கண்ணாடி வைக்க கூடாது அது நேர்மறை ஆற்றலை வெளியேற்றி மாறாக எதிர்மறை ஆற்றலை அதிகப்படுத்தி விடும். குளியல் அறையில் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். அப்படி மாட்ட விரும்பினால் கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து மாட்டி வைப்பது நல்லது.
முகம் பார்க்கும் கண்ணாடியானது சுக்கிரன், மகாலட்சுமிக்கு இணையானது. எனவே நம்முடைய வீட்டில் பணம் வைக்கும் பெட்டி அல்லது நகை வைக்கும் பெட்டி கண்ணாடியுடன் அமைந்திருப்பது யோகம் தரும் என்பார்கள். கண்ணாடியில் நீங்கள் வைத்திருக்கும் பணம் அல்லது நகை தெரிய வேண்டும். ஒவ்வொரு முறை மூடி திறக்கும் போதும் கண்ணாடியில் நீங்கள் வைத்திருக்கும் பணம், நகை போன்றவற்றை பார்ப்பதால் அவைகள் இரட்டிப்பாகும்.
கண்ணாடி நம்முடைய பிம்பத்தை காட்டக்கூடியது. படுக்கை அறையில், படுக்கையில், பீரோவில் கண்ணாடியை வைப்பது சரியானது அல்ல என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. படுக்கை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதனை பார்க்கும் நேரம் தவிர பிற நேரங்களில் திரை போட்டு மறைத்து வைப்பது அவசியம்.
ஒருசிலர் தூங்கும் கட்டிலில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். வாஸ்து சாஸ்திரப்படி அது தவறாகும். தம்பதியர் படுக்கும் போது அந்த பிம்பம் கண்ணாடியில் விழுந்தால் அது உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும். உடல் நலக்கோளாறுகளும் வருமாம். மனதளவில் சில குழப்பங்களையும் ஏற்படுத்துமாம்.
கணவன் மனைவி படுத்திருக்கும் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி படுக்கையை நோக்கி கட்டாயம் இருக்கக் கூடாது. படுக்கறையில் கண்ணாடி இருந்தால் போர்க்களமாக மாறிவிடுமாம் எனவே அதை சரியான இடத்தில் வைப்பது நல்லது. படுக்கை அறையில் உள்ள பீரோவில் கண்ணாடி இருந்தால் அதை உறங்கும் நேரத்தில் திரை போட்டு மறைத்து வைப்பது நல்லது.

தொழில், வியாபாரம் நடத்தும் இடத்தில் பணம் வைத்திருக்கும் இடத்தை பார்த்த திசையில் கண்ணாடி வைத்திருந்தால் அங்கு நேர்மறை ஆற்றலை கண்ணாடி அதிகரிக்கும். நமது வீட்டில் நாம் எதிர்மறை ஆற்றலை அதிகம் உணரும் இடங்களில் அந்த திசையை பார்த்தவாறு கண்ணாடி வைத்தால் அங்கு இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேறிவிடும். தொழில் வியாபரம் நடைபெறும் இடங்களில் ஜன்னலை பார்த்தவாறு அந்த திசையில் கண்ணாடி வைத்தால் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தும்.
வீட்டு தலைவாசலுக்கு நேராக சிலர் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். வாஸ்துபடி இது சரியானதல்ல என்பது நிபுணர்களின் கருத்தாகும். செல்வ வளம் வெளியேறி பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். கண்ணாடியை சரியாக மாட்டினால் செல்வம் வந்து விடுமா என்று சிலர் கேட்கலாம். எல்லாமே நம்பிக்கைதான். நம்பிக்கையுடன் எதையும் செய்தால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications