நெகடிவ் எனர்ஜியை தூர விரட்டுங்கள்.. வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க இதை செய்ய மறக்காதீர்கள்!
சென்னை: நம்முடைய வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். உடைந்த பொருட்களும், தோட்டத்தில் காய்ந்த செடிகளும் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும்.
தலைவாசல்: நம்முடைய வீட்டின் தலைவாசல்தான் சகல நன்மைகளுக்கும் வாசலாக இருக்கிறது. தலைவாசல் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். தலைவாசல் கதவில் நிலைப்படியில் மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மாவிலை தோரணங்கள் கட்டுவது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். கதவுகள், பூட்டுக்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கதவுகள் சத்தம் போடக்கூடாது. எண்ணெய் ஊற்றி அதை சரி செய்ய வேண்டும்.

வீட்டு தோட்டத்தில் உள்ள செடி கொடிகள் காய்ந்து போகக் கூடாது. பட்டுப்போன மரங்கள் இருக்கக் கூடாது. காய்ந்த செடி கொடிகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். மரங்கள் பட்டுப்போய் இருந்தால் அந்த மரங்களை வெட்டி வீசி விட வேண்டும். இது போன்ற செயல்களால் நம்முடைய வாசலில் தடையாக இருக்கும் நெகடிவ் எனர்ஜி அகன்று விடும். பாசிட்டிவ் எனர்ஜி வீட்டிற்குள் அதிகரிக்கும்.
சில நேரங்களில் உடைந்த பொருட்களையும் வீட்டிற்குள் சேமித்து வைத்திருப்பார்கள். உடைந்த கண்ணாடியை கூட பயன்படுத்துவார்கள். அது தவறான செயல். உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், உபயோகம் இல்லாத பழைய துணிகள் போன்றவற்றை வீட்டிற்குள் கண்டிப்பாக வைத்திருக்கக்கூடாது. நம்முடைய வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்றால் பயன் இல்லாத பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடவேண்டும்.
வீட்டினை சுத்தமாகவும், அழகாவும், பராமரித்து வைத்திருந்தால் வீட்டில் ஆரோக்கியமும், சகல ஐஸ்வர்யங்களும் என்றும் நிறைந்திருக்கும். சுத்தமான வீட்டில் எப்போதுமே மகாலட்சுமி குடியேறுவாள். அழுக்கான அசுத்தமில்லாத வீட்டில் எப்போதுமே சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அதோடு அழுக்கான இடங்களில் நெகட்டிவ் எனர்ஜிதான் அதிகரிக்கும்.
வீட்டில் அழகுக்காக பல கடிகாரங்களை வைத்திருப்பார்கள். அது தவறான செயல். ரிப்பேர் ஆன ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். அதனால் கடன் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். அதே போல துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகளை பீரோவில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். எனவே ரிப்பேர் ஆன பொருட்களை எல்லாம் தூர குப்பையில் வீசி விடுங்கள் அதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
கிழிந்த செருப்புகளை ஒருபோதும் வீட்டில் சேமித்து வைக்காதீர்கள். செருப்பு வைக்கும் ஸ்டேண்டில் தேவையற்ற செருப்புகளை வைக்காதீர்கள். செருப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அதை ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். அறுந்து போன செருப்புகளை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அதே போல தலைவாசலுக்கு நேராக செருப்புகளை கழற்றி விடக்கூடாது. சரியான இடத்தில் செருப்புகளை அடுக்கி வைத்தால் அதற்கேற்ப பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications