Vijayadashami 2025 Nalla Neram: இன்று விஜயதசமி! "இந்த" நேரத்தில் குழந்தைகளை "அ" எழுத வைங்க!
சென்னை: விஜயதசமியான இன்று உங்கள் குழந்தைகளுக்கு "அ, ஆ" எழுத வைக்க நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அது போல் இதில் குறிப்பிடும் நல்ல நேரத்தில் பள்ளிகளிலும் சேர்க்கலாம். பல்வேறு பள்ளிகளில் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
நவராத்திரியின் 10ஆவது நாள் மும்பெரும் தேவியர்களான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை வதம் செய்து அதில் பெற்ற வெற்றியைத்தான் விஜயதசமி நாளாக கொண்டாடி வருகிறோம்.

அதாவது விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். இந்த நாளில் தொடங்கும் எந்த நல்ல காரியமும் வெற்றியை கொடுக்கும். இந்த விஜயதசமி நன்னாளில் பல அலுவலகங்களில் புதிய கணக்குகளை தொடங்குவர்.
குழந்தைகள்
அது போல் இந்த நாளில் குழந்தைகளுக்கு முதற்கல்வியையும் ஆரம்பிப்பார்கள். இந்த நாளில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கினால் வாழ்க்கையில் அறிவுக் கூர்மையுடன் இருந்து வெற்றி வாகை சூடுவார்கள் என்பது நம்பிக்கை.
விஜயதசமி
இதனால்தான் ஏப்ரல் அல்லது ஜூன் மாதங்களில் குழந்தைகளை சேர்க்காமல் விஜயதசமி நாளில் குழந்தைகளை சேர்க்கிறார். பாரம்பரிய முறைபடி பெரிய தாம்பாள தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி அதில் அவரவர் தாய்மொழியின் முதல் எழுத்தை எழுத வைப்பது வழக்கம். இதை விஜயதசமி வித்யாரம்பம் என்று அழைப்பது வழக்கம்.
குழந்தைகள் பள்ளிச் சேர்க்கை
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் பெற்றோர்களில் சிலர் இந்த முதல் எழுத்தை எழுத வைத்தாலே அவர்களின் வாழ்வு சிறக்கும் என நம்புகிறார்கள். இதனால் கோயில்களிலும் வீடுகளிலும் இது போல் நெல்லில் முதல் எழுத்தை எழுதுகிறார்கள். எல்கேஜி, யுகேஜி படிக்க வயது கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
பள்ளிகள் திறப்பு
இதனால் இன்று பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கைக்காக திறந்திருக்கும். அப்படிப்பட்ட விஜயதசமி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேற்று நவராத்திரியின் 9ஆவது நாளாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
விஜயதசமியில் பூஜை செய்ய உகந்த நேரம்
அந்த வகையில் ஆயுத பூஜைக்கு முடியாவிட்டால் விஜயதசமி நாளிலும் சிலர் பூஜை செய்வது வழக்கம். அவர்கள் பூஜை செய்ய எந்த நேரம் உகந்தது என்பதை பார்க்கலாம்.
நல்ல நேரம் இதுதான்
காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நல்ல நேரம்தான் பூஜை செய்யலாம்.
அ எழுத வைக்க
அது போல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது, அ எழுத்தை எழுத வைப்பதற்கு நல்ல நேரம் எது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். சந்திர ஓரையான காலை 7 மணி முதல் 8 மணி வரையும், குரு ஓரையான காலை 9 மணி முதல் 10 மணி வரையும் வித்யாரம்பம் தொடங்கலாம். அதிலும் கல்வி கற்பதற்கு குரு ஓரையும், பாட்டு, நடனம் உள்ளிட்ட கலைகளை கற்றுக் கொள்ள சந்திர ஓரையையும் தேர்வு செய்யலாம்.
கோயில்களில் வித்யாரம்பம்
இன்று பல்வேறு ஐயப்பன் கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். எனவே காலையில் குளித்து முடித்து கோயிலுக்கு சென்று குழந்தைகளை தாய்மொழியின் முதல் எழுத்தை எழுத வைக்கலாம். அது போல் வீட்டில் இருந்து இதை செய்யலாம்.












Click it and Unblock the Notifications