விஜயதசமி கோலாகலம்..கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம்.. நெல்மணிகளில் எழுதிய குழந்தைகள்
தஞ்சாவூர்: விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு குழந்தைகள் நெல்மணியில் 'அ' என அட்சரம் எழுதி கல்வியை எழுத ஆரம்பித்தனர். ஏராளமான மாணவர்கள் பேனா, பென்சில்களை சரஸ்வதி அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சரஸ்வதி ஆலயங்களில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் பத்தாம் நாள் விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் இன்று வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர்.
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.
குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற வித்யாரம்பம் நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேட தொடங்குகின்றார்.
அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வானது வெற்றியின் அடையாளமான விஜயதசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.
மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
இந்தியாவில் தனி சன்னதி கொண்ட சரஸ்வதி கோயில்கள் ஒரு சில மட்டுமே உள்ளது. இதில் பிரசித்தி பெற்ற கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயில் புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு பாடல் பாடப் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவர்கள் நோட்டு, பேனாவை வைத்து வணங்கினர். சிறு பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பச்சரிசியில் அகரம் எழுதி பழக்கினர். சரஸ்வதி ஆலயத்திற்கு வந்திருந்த மாணவர்கள் பலரும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களின் தேர்வு எண்களை எழுதி வைத்து சென்றதோடு தேர்வு எழுதும் பேனா, பென்சில்களை அம்மன் பாதத்தில் வைத்து ஆசி பெற்றனர்.
சென்னை மயிலாப்பூரில் பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பச்சரிசியில் அச்சரம் எழுதிப் பழக்கினர். அண்ணாநகர், மகாலிங்க புரம் உள்ளிட்ட முக்கிய ஐயப்பன் கோயில்களில் வித்யரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலை முதலே கோயில்களில் திரண்டனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு முன்பு தாம்பாலத்தில் நெல்மணி, பச்சரிசி வைக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு, நெல்மணியில் தாய்மொழி தமிழ்மொழியின் முதல் எழுத்தான. 'அ' எழுத வைத்து கல்வி கற்கத் தொடக்கி வைத்தனர்.
தங்க ஊசியைக் கொண்ட குழந்தைகளின் நாவில் 'அ' எனவும் ஓம் என்றும் எழுதினர். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் பெயர்கள் அனைத்தையும் குழந்தைகளை எழுத வைத்தனர். சில குழந்தைகள் ஓம் என்றும் எழுதினர். அரசு தொடக்கப்பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications