Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... கலர் கலராக கொழுக்கட்டைகள் செய்வது எப்படி! ஆஹா இவ்வளவு ஈஸியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் இந்துக்களுக்கு முக்கியமான ஒரு நாள்.. இன்று உலகெங்கும் உள்ள இந்துக்கள் விநாயகர் பிறந்த நாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். எப்போதும் வெள்ளை கலரில் இருக்கும் கொழுக்கட்டைகளை கலர்புல்லாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று வீடுகளிலும் வீதிகளிலும் வைக்கப்பட்டிற்கும் விநாயகர் சிலைகள். அடுத்து அவருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டைகள்.

vinayagar chathurthi 2024 2024

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சதுர்த்தி நாளன்று இனிப்பு பூரணம் கொண்ட கொழுக்கட்டைகளை விநாயகருக்குப் படைப்பது வழக்கம். மேலும், குழந்தைகளும் இந்த கொழுக்கட்டைகளை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் விரும்பும் இந்த கொழுக்கட்டைகளில் நீங்கள் வேறு சில மாற்றங்களைக் கூட முயன்று பார்க்கலாம். எப்போதும் வெள்ளை கலரில் இருக்கும் கொழுக்கட்டைகளை கலர் கலராக செய்து கொடுத்தால் அவர்கள் இன்னும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

கலர் கொழுக்கட்டைகளா.. அது எப்படி இருக்கும்.. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குக் கேள்வி வரும். கலர் கொழுக்கட்டைகள் செய்வது அவ்வளவு ஒன்றும் கடினம் இல்லை. கூடுதலாகச் சின்ன சின்ன வேலை இருக்கும். அதை மட்டும் செய்தால் போதும்.. கலர் கலராக கொழுக்கட்டைகள் செய்து வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிடலாம்.

இனிப்பு பூணம்: இந்த கலர் கொழுக்கட்டைக்குப் பூரணம் செய்வது வழக்கம் போலத் தான். முதலில் ஒரு கப் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே அளவுக்கு வெள்ளத்தை எடுத்து அதைப் பொடியாக்கக் கொள்ளுங்கள். அதை ஒரு வாணலியில் போட்டு மிதமான சூட்டில் நன்கு மிக்ஸ் ஆகும் வகையில் கலக்கி விடுங்கள். இரண்டும் நன்கு கலந்த பிறகு தேவையான அளவுக்கு அதில் ஏலக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பூரணம் ரெடி.

கலர் கொழுக்கட்டை: அடுத்து தான் முக்கியமான விஷயம். கலர் கொழுக்கட்டை செய்ய முதலில் 10 சங்கு பூக்கள், 10 செம்பருத்தி பூக்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பூக்களின் காம்புகளை நீக்கிவிட்டு, இதழ்களைத் தனியே எடுத்து அதைத் தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ளுங்கள். அதில் சிறு பூச்சிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் அதில் 2 கப் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கால் ஸ்பூன் உப்பையும் நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சங்குப்பூக்களைப் போடுங்கள். சில நிமிடங்களில் அந்த பூக்களின் மொத்த நிறமும் நீரில் இறங்கிவிடும். அதை எடுத்து கொழுக்கட்டை பிசையும் மாவில் போட்டுப் பிசைந்து கொள்ளுங்கள். தேவையான அளவு நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். சில நிமிடம் பிசைந்தாலே நீல நிறத்தில் கொழுக்கட்டை மாவு கிடைத்துவிடும். அடுத்து இதே முறையில் செம்பருத்தி பூக்களையும் போட்டுச் சிவப்பு நிறத்தில் மாவைத் தயார் செய்யுங்கள்.

ரொம்ப ஈஸி: அவ்வளவு தான். மாவு ரெடியாகிவிட்டது. இதன் பிறகு வழக்கம் போலக் கொழுக்கட்டை மாவின் நடுவில் பூரணத்தை வைத்து அதை வேக வைத்து எடுக்கவும். கலர் கலரான கொழுக்கட்டைகள் ரெடியாகிவிடும். இதை 2minutes_chef என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் பகிர்ந்து உள்ளது. அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+