கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவது இதுக்குதானா? குழந்தைகளுக்கு கறுப்பு நூல் காலில் கட்டுவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலானோர் கால்களில் கருப்பு கயிறு கொள்வார்கள்... குழந்தைகளுக்குகூட காலில் கருப்பு கயிறு அணிவிப்பார்கள்.. இந்த கயிறு அணிவதன் நோக்கம், முக்கியத்துவம், பலன்கள் என்னென்ன தெரியுமா? கயிறு கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகளுக்கெல்லாம் ஆன்மீக காரணங்களுடன் சில மருத்துவ காரணங்களையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. அவைகளை பற்றியும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கால்களில் பலரும் கருப்பு கயிறு அணிய மருத்துவ காரணமும் உள்ளது.. உடம்பின் முக்கிய நரம்பு முடிச்சுப்பகுதியாக கணுக்கால் உள்ளதால், அங்கே கயிறு கட்டும்போது, நாடியின் இயக்கம் தடையின்றி சீராகிறது.. எண்ணங்களும், மனநிலையும் தடுமாற்றமின்றி சரிநேர்க்கோட்டில் பயணிக்கும்.

black thread black rope spirtual

ஆரோக்கிய நன்மைகள்

அதுமட்டுமல்ல, காலை சுற்றியிருக்கும் கயிறு தரும் அழுத்தமானது, ரத்த ஓட்டத்தை தூண்டிவிடும், ரத்த கட்டிகள், பிற சுழற்சி பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைத்துவிடும்.. மேலும் இந்த கயிறு தரும் அழுத்தமானது, இயற்கையான அக்குபிரஷர் புள்ளியாகவும் செயல்படுகின்றன. இதனால், கால் தசைகளில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்துவிடுகிறது.

காலில் கருப்பு கயிறு அணிந்தால் வயிறு வலி ஏற்படாது.. எனவே, ஒருவருக்கு அதிக வயிற்றுவலி வந்தால், எந்த காலில் கருப்பு கயிறு அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் வயிறு வலி குறைவதுடன், தொப்புள் இடப்பெயர்ச்சிக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. அதேபோல, காயங்கள் ஆறாமல் இருந்தாலும், காலில் கருப்பு கயிறு அணிவதால் எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

தீரும் நோய்கள்

வலது காலிலும், இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவதால், மூட்டுவலி குறையும் என்பார்கள்.. குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராக இருந்தாலும், அவர்கள் காலில் கருப்பு நூலை கட்டிவிடலாம்..

சூரிய ஒளியிலிருந்து வீசும் கதிர்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை சக்தி, கருப்பு நிறத்துக்கு உண்டு என்பதால், பல நோய்கள் மறைமுகமாக தீர்கின்றன.

இத்தனை நன்மையும் இருப்பதால்தான், அந்த காலத்தில், ஆண்களும் பெண்களும், காலில் கயிறு கட்டிக்கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர்.. ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் இந்த கயிற்றினை கட்டியிருக்கிறார்கள்.

முக்கிய 3 பொருட்கள்

வெறும் கயிறாக இல்லாமல், பட்டு, தர்ப்பை, அருகம்புல் என்ற இந்த 3 பொருளையும் சேர்த்து கயிறாக திரித்து கையிலும் அணிந்துள்ளனர்..

அதிர்வுகளையும், நவக்கிரகத்தின் கதிர் வீச்சினையும் கிரகித்து ஈர்க்கும் தன்மை மேற்கண்ட 3 பொருளுக்கும் உள்ளன.. மேலும், பாசிட்டிவ் எனர்ஜியை மனதிற்குள் பெருக்க செய்யும் தன்மையும் உள்ளன.. எனவேதான் இவைகளை வைத்து, கயிறாக திரித்து கட்டி வந்துள்ளனர்..

ஆன்மீக பலன்கள்

ஆன்மீகத்திலும் கருப்பு கயிறு அணிய பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.. காலில் கயிறு கட்டுவதால் அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக கருதப்படுகிறது.

எதிர்மறை ஆற்றல்களிலிருந்து தப்பிக்க முடியும்.. தீய ஆவிகள், எதிர்மறை அதிர்வுகள், கண் திருஷ்டியை விரட்டுவதற்கான கேடயமாக இக்கயிறு கருதப்படுகிறது. தீய சக்தி, துரதிருஷ்டங்கள், செய்வினை போன்றவற்றிலிருந்து தடுத்து, அணிபவருக்கும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் காலில் கயிறு அணிபவருக்கு எந்த தடையும் ஏற்பட வாய்ப்பில்லை.

சனி பாதிப்பு குறையும்

வலது காலிலும், இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுவதால், சனி தோஷத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.. கணுக்காலைச் சுற்றி கருப்பு நூலை அணிவது, சனி தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்க செய்யும்..

எனவே யாருக்காவது ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், உடனே கருப்பு கயிற்றினை, சனிபகவானுக்கு படைத்து அதைக் கணுக்காலில் கட்டிக்கொண்டால் போதும்,. சனி பகவான் எப்போதுமே ஒருவரின் கால்களேயே முதலில் பற்றுவதால், இப்படி கணுக்காலில் கயிறு கட்டுவதாக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

இடுப்பில் கருப்பு கயிறு

அதேசமயம், காலில் கருப்பு கயிறு அணிவது சரியல்ல என்று சிலர் சொல்கிறார்கள். சனாதன தர்மத்தின் படி, கருப்பு கயிறு பாதுகாப்பிற்கான அடையாளமாக கருதப்படுவதால், காலில் கட்டுவது கெட்ட விளைவுகளை தந்துவிடும்.. எனவே, காலில் அணிவதை தவிர்த்துவிட்டு இடுப்பு, இடது கை, கழுத்து இப்படி கருப்பு நூலை அணிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கழுத்திலும், பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும், இருவரும் இடுப்பிலும் கருப்பு கயிறை கட்டிக் கொள்ளலாம்.

அதேபோல கருப்பு கயிற்றினை இடுப்பில் கட்டினால் எலும்பு நோய்கள் நெருங்காது.. முதுகுத்தண்டில் தொந்தரவுகள் அண்டாது, முதுகெலும்பும் வலுவடைகிறது.. ஆனால், அப்படி அணியும் முன், சனி பகவானை வணங்கிவிட்டு அணியலாம்.

செய்யக்கூடாத தவறுகள்

சிவப்பு நூல் அல்லது வேறு நிற நூல் கட்டியிருந்தால் அதனுடன் சேர்த்து கருப்பு நூலை கட்டக்கூடாது.. ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் கருப்பு கயிறு அணியலாம்.. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் இந்த கயிற்றை அணியலாம்.

நிதி சிக்கல் இருந்தால், செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி கருப்பு கயிறு கட்டிக்கொள்ளலாம்.. கயிறு பழையதாகினால் அதனை மாற்றலாம். ஆனால், பழைய கயிற்றை கழட்டி அரச மரத்தடியில் வைத்துவிட்டு, புதிய நூலை கட்டிக்கொள்ளலாம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+