சித்தர்களின் கொடை! சகல செல்வங்களை தரும் ரசமணி! ஆரோக்கியத்தையும் அள்ளி தரும் ரசவாதம்
சென்னை: சித்தர்களால் உருவாக்கப்பட்ட ரசமணி என்றால் என்ன, அதை நாம் பயன்படுத்துவதால் நோயின்றி வாழலாம் என்பது தெரியுமா?
ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. மனிதர்கள் நோயின்றி சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ்வதற்காகவே சித்தர்கள் இந்த ரசமணியை உருவாக்கினர்.

ரசமணி என்றால் ஒன்றுமில்லை, பாதரசம். திரவத் தன்மை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடன் உருவாக்கியதுதான் ரசமணி. இதை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. அதிலும் சுத்தமான ரசமணியை செய்வது அபூர்வமானவர்களால்தான் முடியும்.
இதை உருவாக்குவது என்பது பிரம்ம பிரயத்தனம்தான். சுத்தமாக உருவாக்கப்படும் ரசமணிகள்தான் சகல சக்திகளையும் தரும். எதிர்மறை எண்ணங்களை அழிக்கும். போலியானவற்றை வாங்கி பயன்படுத்தினால் அது நமக்கு நன்மையை தருவதற்கு பதிலாக தீமையைத்தான் தரும்.
எனவே ரசமணி வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும். சித்தர்கள் இந்த ரசமணியை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல பயன்படுத்தினார்களாம். அதாவது மந்திரங்கள் ஓதப்பட்டு மெருக்கேற்றி வைக்கப்பட்ட ரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி கிடைக்குமாம்.
இப்படித்தான் போகர் சித்தர் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இது பணத்தாசை இல்லாதவர்களுக்கு ஏகப்பட்ட பலன்களை அளிக்கும். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதுதான் இந்த ரசமணி. இதை அணிந்தால் உடலில் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இயங்கலாம்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் குணம் உண்டு. ரத்தத்தை சுத்திகரித்து உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கிறது. ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அணிந்தால் இயல்பான உடல்நிலைக்குத் திரும்பலாம். உடல் உறுப்புகள் சரியாக இயங்க ரசமணிகள் பயனளிக்கின்றன.
இந்த ரசமணியால் முகம் பிரகாசிக்கும், சிந்தனை, புத்திசாலித்தனம் மேலோங்கும். வயதானாலும் இளமையாகவே இருப்பீர்கள். விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. செய்வினை போன்ற தீய சக்திகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். ரசமணியை கொண்டு அஷ்டமா சித்துகளையும் அடையலாம் என சித்தர்கள் கூறியிருந்தனர். ஆனால் அதற்கான சூட்சுமத்தை அவர்கள் விளக்கவே இல்லை.
வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கும். இடி, மின்னல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும். வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படுவதை தடுக்கும். ரசமணியை உண்மையானதா இல்லை போலியா என்பதை எப்படி சோதனை செய்யலாம் தெரியுமா
உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் அடிப்பது போல் இருக்கும். கீழே போட்டால் உடையாது. இரும்பு சட்டியில் போட்டு உருக்கினால் உருக்கிவிடும். பிறகு பழைய நிலைக்கு வந்து கெட்டியாகிவிடும்.












Click it and Unblock the Notifications