ஸ்படிக மணி மாலையை அணிவதால் என்ன பலன்? யார் அணியலாம்? டூப்ளிகேட்டை கண்டுபிடிப்பது எப்படி?
சென்னை: ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம், யாரெல்லாம் அணியக் கூடாது, அதை அணிந்தால் என்னவெல்லாம் பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
கோயிலுக்கு சென்றாலே சுவாமியை வழிபட்டுவிட்டு அங்கு கிடைக்கும் மாலைகளை வாங்கி வருவதை நாம் தவறியதில்லை. அங்கு விற்கப்படும் துளசி மாலை, ஸ்படிக மாலை, கருங்காலி மாலை உள்ளிட்டவைகளுக்கு ஒவ்வொரு பண்பு இருக்கிறது. இதை அந்த கடைக்காரரே சொல்வார்.

அவரவர் தேவைக்கேற்ப அந்த மாலைகளை வாங்கி அணிந்து கொள்வோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஸ்படிக மாலை. இது ஒரு பாறை வகையை சேர்ந்தது. பூமிக்கு அடியில் பல லட்ச ஆண்டுகளாக நிறைய பாறைகள் இறுகி உருமாற்றம் அடைந்துள்ளன.
அப்படி கண்டெடுக்கப்படும் ஸ்படிக பாறைகள் சுத்தம் செய்யப்பட்டு அதன் வடிவத்தை மாற்றி விற்பனை செய்கிறார்கள். ஸ்படிகம் தெய்வீக சக்தி கொண்டது. ஆன்மீகம் என்றில்லை அறிவியல் ரீதியிலும் இந்த ஸ்படிக மாலை அணிவது பலனை தரும் என்கிறார்கள். ஸ்படிகத்தில் சிவன், நந்தி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் கிடைக்கின்றன.
இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த ஸ்படிக சிலைகளுக்கு வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்து வந்தாலே போதும். இறைவன் ஆசி நமக்கு கிடைக்கும். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், ஸ்படிக மணியை வேறு எந்த உலோகத்துடனும் சேர்க்கக் கூடாது. தங்கம் அல்லது வெள்ளியுடன்தான் கோர்க்க வேண்டும். ஸ்படிகத்துடன் ருத்ராட்சம் இருக்கவே கூடாது.
ஸ்படிக மாலைகளை குளிர்பிரசேதங்களில் வசிப்போர், உடல் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருப்போர் அணியவே கூடாது. மற்றபடி குழந்தைகள், பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அணிந்தால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த ஸ்படிக மாலை அணிவதால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். மனம் அமைதியாக இருக்கும். உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். குறிப்பாக தீய சக்திகள் அண்டவே அண்டாது. ஸ்படிக மாலையை அணிந்து கொள்வதற்கு முன்பும் 3 மணி நேரம் தண்ணீரில் போட்டுவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். வேறு ஒருவரின் மாலையை பயன்படுத்தக் கூடாது. குளிக்கும் போதும் போட்டுக் கொண்டே குளிக்கலாம்.
உங்கள் உடல் உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் இழுத்துக் கொள்ளும். இரவு தூங்கும் போது தலையணைக்குள் அடியில் வைத்துவிட்டு காலையில் எழுந்ததும் போட்டுக் கொள்ளலாம். ஸ்படிகத்தை தொட்டாலே குளிர்ச்சியாக இருக்கும். நீரில் போட்டு பார்த்தால் நீரோடு நீராக இருக்கும். அது இருப்பதே தெரியாது. இப்படி இருப்பதுதான் ஒரிஜினல் ஸ்படிகம்! எனவே உண்மையை வாங்கி போலியை தவிருங்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications