திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இங்கு சிவனே மலையாக காட்சிக் கொடுப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
திருவண்ணாமலை என்றாலே அருணாசலேஸ்வரர், கிரிவலம், கிரிவலத்தை சுற்றி இருக்கும் கோயில்கள், திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்டவைகள்தான். ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார் உள்ளிட்டோரும் அடங்குவர்.

அந்த வகையில் வரும் 13 ஆம் தேதி திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதற்காக மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. இந்த வைபவத்தை பார்க்க குறிப்பிட்ட அளவுக்கு பக்தர்கள் மலையேறி தீபத்தை காண அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்தை மலையேறி போய் காண முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபம் ஏற்றும் மலை பாதையில் முழுக்க கற்கள் சேதமடைந்தும் பாறைகள் உடைந்தும் காணப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்தை மலையேறி போய் காண முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தீபம் ஏற்றும் மலை பாதையில் முழுக்க கற்கள் சேதமடைந்தும் பாறைகள் உடைந்தும் காணப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்பதை தெரிந்து கொள்ளலாம்.
மலையில் ஏற்றப்படும் தீபமானது சுற்றி 20 கி.மீ. தூரம் வரை தெரியும். இந்த தீபத்தை நேரில் பார்த்தால் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து ஓம் நவச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பலர் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதும் தீபத்தை வணங்கிவிட்டு கிரிவலம் வந்தால் ஆன்மசக்தி அதிகரிக்கும்.
தீபத்திருநாளில் கிரிவலம் வந்தால் எத்தனை பெரிய பாவம் செய்திருந்தாலும் அவற்றிலிருந்து முழுமையாக விமோசனம் கிடைக்கும்.கார்த்திகை தீபத்திலிருந்து 3ஆவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவார்கள் என சொல்லப்படுகிறது. அன்றைய தினம் நாமும் வலம் வந்தால் மிகப் பெரிய புண்ணியம் கிடைக்கும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதால் அதில் இருந்து வரும் புகையானது தீய சக்திகளை அழிக்கும் திறன் கொண்டது. நம் உடல் உபாதைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.
கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மலையில் ஏற்றப்படும் இந்த தீபம் சுமார் 11 நாட்கள் எரியும். இந்த நேரத்தில் எத்தனை காற்று, மழை வந்தாலும் தீபம் அணையாது. பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக உள்ளது இந்த திருவண்ணாமலை












Click it and Unblock the Notifications