அதிர்ஷ்டம் தரக்கூடிய குலதெய்வ வழிபாடு.. இன்று தீபாவளிக்கு பூஜைக்கு சரியான நேரம் என்ன தெரியுமா? வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி தினத்தன்று குலதெய்வம் வழிபாடு செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? குலதெய்வ வழிபாட்டினை எப்போது செய்யலாம்? தீபாவளியன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன தெரியுமா?

எந்த ஒரு செயலை செய்வதானாலும், அதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது கட்டாயம் தேவை.. குல தெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றதாகும்..

spirituality pooja room diwali

எனவே, எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது என்பார்கள்.. அதனால், ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும், குலதெய்வ வழிபாடு மட்டுமாவது வருடத்துக்கு ஒருமுறை செய்துவிட வேண்டுமாம்.

குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால், சாபம் இருந்தாலும் நீங்கிவிடும்.. குலதெய்வத்திற்கு நம்மீது கோபம் இருந்தாலும் தணிந்துவிடும்.

குலதெய்வ வழிபாடு: அந்தவகையில் இன்று தீபாவளி பண்டிகை என்பதால், குலதெய்வ வழிபாட்டை இன்று மாலை 4:30 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்... இதற்கு குலதெய்வ படத்தின் முன்பு, தலைவாழை இலையை விரித்து, தேவையான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம்.

சைவ படையலாக இருந்தால், பூஜை அறையிலும், அசைவ படையல் போடுவதாக இருந்தால், நடுஹாலிலும் படையலை போடலாம். ஒரு செம்பில் நீர் நிறைவாக எடுத்து, 3 ஏலக்காய், எலுமிச்சம் பழத்தை போட வேண்டும். குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி, கற்பூர ஆராதனை காட்டி, குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

ஏலக்காய்: பிறகு, சொம்பு தண்ணீரை எடுத்து கற்பூர ஆரத்தி காட்டுவது போல் அந்த படையலுக்கு 3 முறை காட்டிவிட்டு, தலைவாசலிலும் 3 முறை சொம்பை சுற்றிவிட்டு, பூஜையறையில் வைத்துவிட வேண்டும்.

தீபம் எரிந்து முடிக்கும்போது, சொம்பில் உள்ள நீரை குடும்ப உறுப்பினர்கள் தலையிலும், வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதிலிருக்கும் எலுமிச்சம் பழம், ஏலக்காயை பூஜையிலேயே அன்று இரவு வைத்துவிட வேண்டும். மறுநாள் ஏலக்காயை சமையலுக்கும், எலுமிச்சையை சாறு பிழிந்தும் குடிக்கலாம். இதனால், குடும்பத்துக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.

செல்வம் பெருகும்: குலதெய்வம் வழிபாடு தவிர, மகாலட்சுமி மற்றும் விநாயகருக்கு விருப்பமான பொருட்களை வைத்து வழிபட்டால் வீட்டில் வறட்சியும், வறுமையும் நீங்கி செல்வமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்பார்கள்..

இன்று அணிய உள்ள புத்தாடைகளை, சாமி படத்தின் முன்பு வைத்து, வழிபட்டு மஞ்சள் வைத்த பிறகு தான் அணிய வேண்டும்.. தீபாவளியன்று பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்... இன்று முழுவதும், தேவையற்ற சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது... குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தால்தான், லட்சுமி கடாட்சத்தை பெற முடியும்.

மற்ற கடவுள்களுக்கும் விளக்கேற்ற பூஜிக்க வேண்டும். இதற்கு வீட்டில் அவரவர் வசதிக்கேற்ப விளக்குகளை எவ்வளவு வேண்டுமானாலும். சுவாமி படங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும் செய்து பூஜை செய்ய வேண்டும். படையலுக்கு வீட்டில் செய்யும் பலகாரங்களை எது வேண்டுமானாலும் வைக்கலாம். புது துணியும் படையல் ஆக வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதனையும் சேர்த்து வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+