திருப்பதி ஏழுமலையானிடம் இருக்கும் இந்த நகை வேறு எங்கும் இல்லை! ஒன்னு மட்டுமே ரூ 100 கோடியாம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தினமும் எத்தனை நகைகளை அணிகிறார் என்பதை தெரிந்து கொள்வதுடன் அவருக்கு பிடித்த நெய்வேத்யம் என்ன தெரியுமா?

கிழக்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது திருப்பதி. இந்த நகரை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீது ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்த ஏழுமலையானை பார்க்க 7 மலை, 7 கடல் தாண்டி செல்ல வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.

spirtuality thirupathi jewels

அந்த வகையில் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் பெருமாள்தான் அதிபதி. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள்.

இதே விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். திருப்பதி மலை மேல் இருக்கும் ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதுமே 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் இருக்கும். திருமலை 3000 அடி உயரத்தில் குளிர்ந்த பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.

ஆனால் அபிஷேகம் முடிந்ததுமே ஏழுமலையானுக்கு வியர்த்து விடுகிறது. இதனால் பட்டு பீதாம்பரத்தால் அந்த வியர்வையை கோயில் பட்டர்கள் ஒற்றி எடுப்பார்கள். வியாழக்கிழமைகளில் அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளை எல்லாம் கழற்றும் போது அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கிறது.

பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீஸில் இருந்து வாசனை திரவியங்கள் வரவழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு அதிகாலையில் 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ 1 லட்சம் செலவாகிறது.

ஐரோப்பாவிலிருந்து ரோஜா மலர்கள் திருப்பதிக்கு விமானத்தில் வருகிறது. ஒரு ரோஜாவின் விலை ரூ 80 முதல் ரூ 100 வரை விற்பனையில் பெறப்படுகிறது. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து சாத்துவார்களாம். சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக் கவசம் 365 கிலோ, கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் வேறு யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு மட்டும் ரூ 100 கோடியாகும்.

ஏழுமலையானின் ஆபரணங்களில் ஒரு சில ஆபரணங்களில் பச்சை மரகத கல் உள்ளது. இதன் மதிப்பு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பச்சைக் கல் மரகதம் விசேஷ நாட்களில் மட்டுமே அணிவிக்கப்படுகிறது. தினமும் மூலவருக்கு 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டுமே 40 கிலோ எடை கொண்டது. அவருடைய உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும்.

இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டும் சாத்தப்படும். திருப்பதி ஏழுமலையானின் சமையல் அறை மிகவும் பெரியது. பொங்கல், தயிர்சாதம், புளி சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயாசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு ஆகியவை தயார் செய்யப்படுகின்றன. தினமும் 5000 கிலோ காய்கறிக் கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது.

என்னதான் உணவு தயாரித்தாலும் ஏழுமலையான் விரும்பிச் சாப்பிடுவது தயிர்சாதம்தான். தினமும் ஒரு புதிய மண்சட்டியில் தயிர்சாதம் வழங்குகிறார்கள். தயிர் சாதத்தை தவிர வேறு எந்த உணவும் குலசேகர படியை தாண்டி கொண்டு செல்லப்படாது. ஏழுமலையானின் எச்சில் மண்சட்டியும் தயிர் சாதமும் பக்தர்களுக்கு கிடைத்தால் மிகப் பெரிய பாக்கியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+