உங்கள் வேண்டுதலை இந்த நேரத்தில் வையுங்கள்..நிச்சயம் நிறைவேறும்..நல்லது செய்யும் ராகு காலம்
காலங்கள் நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். அதனால்தான் எதையும் நேரம் காலம் பார்த்து செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
சென்னை: ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும். இந்த நேரங்களில் சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது. புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ராகு காலத்தில் நாம் ஆத்மார்த்தமாக செய்யும் பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
ராகுவும் கேதுவும் பாம்பு கிரகங்கள். விஷ நேரங்கள் ராகு ராகுவின் ஆதிக்கம் கொண்டது, கேது எமனின் ஆதிக்கம் கொண்டது எம கண்டம். ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு சரியான நேரமில்லை என்பதால் ஒதுக்கி வைத்தனர்.

ராகுகால நேரம் என்பது தினசரியும் ஒன்றரை மணி நேரம் வரும். இந்த ஒன்றரை மணி நேரத்தில் பொதுவாகவே யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த ராகு கால வேளையில் நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன பேசுகின்றோமோ அது பலிக்கும் என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை.
ராகு காலம் தினசரியும் வரும் நேரம்:
திங்கள்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
செவ்வாய்: பிற்பகல் 3:00 மணி முதல் 4 .30 வரை
புதன்: 12.00 மணி முதல் 1.30 மணி வரை
வியாழன்: 1.30 மணி முதல் 3.00 மணி வரை
வெள்ளி: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சனி: 9.00 மணி முதல் - 10.00 மணி வரை
ஞாயிறு 4.30 மணி முதல் 6.00 மணிவரை
ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். தீராத கடன் பிரச்சினை, தீராத நோய்களுக்கும் எதிரிகள் தொல்லை தீரவும் நாம் காளியையும், துர்கா தேவியையும் வேண்டிக்கொள்வோம். மவுனமாக மனமுருகி வைக்கும் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அந்த வேண்டுதல் நிறைவேறும்.
வீட்டில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், வெளியே சென்று வேலை செய்தாலும் ராகுகால நேரத்தில் எந்த பேச்சும் பேசாமல் மவுன விரதம் இருப்பது நல்லது. தினசரி ஒன்றரை மணி நேரம் ராகுகால நேரத்தில் மவுன விரதம் இருக்க முடியாதவர்கள் செவ்வாய்கிழமை 3 மணி முதல் 4.30 மணிவரையிலும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும் மவுன விரதம் இருக்கலாம். அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து அம்மனின் 108 போற்றி உச்சரித்து வேண்டுதல் வைத்தால் நிச்சயம் பலிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலத்தில் சிவ ஆலயம் சென்று வணங்கி துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வைக்கும் வேண்டுதல் நிச்சயம் பலிதமாகும். ராகு கால சமயத்தில் கெட்ட வார்த்தைகளையும் அடுத்தவர்களுக்கு தீமை தரக்கூடிய செயல்களையும் செய்யக்கூடாது. அந்த நேரத்தில் நேர்மறையாக மட்டுமே நினைக்க வேண்டும் எதிர்மறை எண்ணங்களை செயல்களை செய்யக்கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications