புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை: இன்று புரட்டாசி பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் சந்திரனின் அற்புத சக்தியை எளிதாக அடையலாம். இதனால் பாவங்களை போக்கி பிணிகளை அகற்றி, தோஷங்களையும் நீக்கும்.

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த மலையை சுற்றி சித்தர்களின் ஆசிரமங்கள், ஜீவசமாதிகள், குளங்கள் போன்றவை உள்ளதால் இந்த மலையை ஒரு முறை வலம் வந்தால் அனைத்து தெய்வங்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். நெருப்பு வடிவமாக சிவபெருமான் இருக்கும் இந்த திருவண்ணாமலையில் சித்தர்கள் இன்றும் கிரிவலம் வருகிறார்கள் என சொல்லப்படுவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் பக்தர்களுக்கு கிடைக்கும். சித்தர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் பக்தர்களுக்கு தங்கள் இருப்பை காட்டுவார்கள் என்கிறார்கள்.
அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தினமே பவுர்ணமி திதியும் வந்துள்ளது. பொதுவாகவே மாதந்தோறும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருகிறார்கள். அதிலும் ஆடி மாத பவுர்ணமி, சித்திரை மாத பவுர்ணமி, புரட்டாசி மாத பவுர்ணமி எல்லாம் விசேஷமாகும்.
பவுர்ணமி அன்று சந்திரன் தனது 16 கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். அதன் குளிர்ந்த கிரகங்கள் நம்மைச் சுற்றும். இதனால் உடம்பும் உள்ளமும் தூய்மை அடையும். சந்திரனின் அற்புத சக்தியை அத்தனை எளிதாக யாராலும் கிரகித்துக் கொள்ள முடியாது. ஆனால் அண்ணாமலையார் அருள் இருந்தால் எல்லாமே கைக் கூடும்.
அந்த வகையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்று பவுர்ணமி திதி, காலை 11.22 மணி முதல் நாளை 18ஆம் தேதி காலை 9.10 மணி வரை உள்ளது. இதுதான் கிரிவலம் வர உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications