சிவன் இருக்கும் இடத்தில் சித்தர்கள் இருப்பது ஏன்? ஜீவசமாதியின் போது உடல் கெடாதது ஏன்?
சென்னை: ஜீவசமாதிகளுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. சாதாரணமானவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜீவசமாதிகளுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?

அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன? சாதாரணமானவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?
ஆன்மீகம் என்னும் கடலை கடக்க நினைக்கும் அணைத்து மனிதர்களுக்கும் மனதில் கட்டாயம் இந்த கேள்விகள் எழுந்தே தீரும்.
கேள்வி 1: சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?
அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?
யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல... ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள்.
அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள். குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.
கேள்வி 2: சாதாரணமானவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?
ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்.
சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான ஆத்மாவாகதான் பிறக்கிறோம்.
ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம்.
ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.
ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாதது எப்படி என்ற கேள்வி வரலாம்.
விடை- காயகல்பம். காயகல்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும்.
இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார். பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள்.
அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும்.
பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம். மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்.
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"
"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
நமசிவாய வாழ்க. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications