நாளை சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை: நாளை சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் வருவதற்கான நல்ல நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதை போல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழாவானது கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது.

1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி இரவு வரை கோயிலில் இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை 14 கி.மீ. தொலைவு கொண்டது.
இங்கு மாதாமாதம் பவுர்ணமி நாட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் வருவர். அது போல் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி நாளை 12ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நேற்று முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். பக்தர்களுக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்களும் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 4,533 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கூட்ட நெரிசலில அசம்பாவித சம்பவங்களில் இருந்து தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அது போல் மருத்துவ குழுவினரும் 56 இடங்களில் தயார் நிலையில் இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது போல் கிரிவலப் பாதையில் 24 நேரமும் இயங்கும் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications