பேய், பிசாசு கெட்ட கனவுகள் வந்தால் கெட்டது நடக்குமா? கனவில் பாம்பு வந்தால்..?
சென்னை: கெட்ட கனவுகள் காண்பதால் கெட்ட விஷயங்கள் நடக்குமா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும். கெட்ட கனவுகளில் இருந்து விலக பெருமாள் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும்.
இதுகுறித்து குந்தவி என்பவர் தனது சமூகவலைதளங்களில் கூறியிருப்பதாவது: கெட்ட கனவுகள் காண்பதால் கெட்ட விஷயங்கள் நடக்குமா?

கனவு என்பதை யாரும் தடுக்க முடியாத ஒன்று. அப்படியாக, பலருக்கும் பல விதமான எதிர்பாராத கனவுகள் வரும்.மேலும் கனவு என்பது நேர்மறை கனவுகளாக மட்டும் இருக்க வேண்டும் என்று இல்லை.
எதிர்மறை கனவுகளாக கூட இருக்கலாம்.அப்படியாக, எதிர்மறை கனவுகள் கண்டால் வாழ்க்கையில் எதிர்மறை விஷயங்களை தான் சந்திப்போமா?அதற்கான பரிகாரங்கள் என்ன என்று பார்ப்போம். கனவுகளில் நம்முடைய நெருங்கிய சொந்தம் இறந்து போனால் கண்டிப்பாக அச்சம் தோன்றும்.
அவ்வாறு நெருங்கிய சொந்தங்கள் அல்லது நண்பர்கள் இறந்து போவதாக கனவு கண்டால் அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல் சிலருக்கு அடிக்கடி உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவுகள் வரும்.அவ்வாறு கனவுகள் வந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும் என்பது அர்த்தம்.
சிலருக்கு பாம்பு கொட்டுவது போல் கனவு வந்தால் அவர்களின் திறமை வெளிப்பட போகிறது என்று அர்த்தம்.அதே சமயம் கனவில்,நெருப்பை காணும் பொழுது உங்களை அதிர்ஷ்டம் தேடி வர போகிறது என்று அர்த்தம்.
ஆமை மீன் தவளை போன்ற நீர் வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் நீண்ட நாள் மனதை வருடிய கவலைகள் பறந்து போகும்.இறந்தவருடன் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் தடை இன்றி நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
பரிகாரங்கள்:
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அடிக்கடி கனவில் வந்து தொந்தரவு செய்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துக்கள் கனவுகள் வராது.
உடல்நலன் குறைபாடு போன்ற விஷயங்களை கனவில் வரும் பொழுது தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடும் நல்லது.
பேய்,பிசாசு போன்ற மற்றும் சுபகாரியங்கள் நின்று போவது போல் கனவு கண்டால் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். மேலும்,கெட்ட கனவுகளில் இருந்து விலக பெருமாள் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications