Varalakshmi Nonbu: வரலட்சுமி விரதம் எப்போது கொண்டாடப்படுகிறது? ஆவணியில் இல்லையாமே!
சென்னை: வரலட்சுமி விரதம் (வரலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு) எப்போது கொண்டாடப்படுகிறது என்பது தெரியுமா? ஆவணிக்கு பதிலாக ஆடியிலேயே வருகிறதே ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வரலட்சுமி நோன்பு என்பது தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்வதால் லட்சுமி தேவியின் ஆசியும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தங்கள் கணவரின் ஆயுளை நீடிக்கவும் தாலி பாக்கியம் நிலைத்திருக்கவும் அவ்வப்போது வழிபாடுகளை பெண்கள் நடத்துவதுண்டு.

அந்த வகையில் இந்த வரலட்சுமி பூஜையை மேற்கொண்டால் வாழ்வுக்கு தேவையான செல்வத்தையும் சகல சவுபாக்கியங்களையும் அருளும் என்கிறார்கள். பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.
இந்த நாளில் பெண்கள் வீட்டில் சாமி அறையில் பூஜை, புனஸ்காரங்களை செய்து முடிப்பர். அந்த வகையில் வரலட்சுமி விரதமும் வெள்ளிக்கிழமையில் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திதிகளின் அடிப்படையில் வளர்பிறையில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது.
அதாவது ஆவணி மாதத்தில் வரும் முதல் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும். பவுர்ணமிக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமைகள் தேய்பிறை வெள்ளி என்பதால், பவுர்ணமிக்கு முந்தைய வளர்பிறை வெள்ளி என்று வருகிறதோ அந்த நாளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கிறது.
பஞ்சாங்கத்தின்படி 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆவணிக்கு பதிலாக ஆடி மாதத்திலேயே வருகிறது. அதாவது ஆவணி மாதத்தின் முதல் நாளே தேய்பிறை பிரதமை என்பதால் ஆவணி பவுர்ணமிக்கு முந்தைய வளர்பிறை வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 8ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் பவுர்ணமியும் ஆகும். அன்று திருவோண நட்சத்திரமும் வருகிறது. வளர்பிறை நாளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுவதால் ஆடி மாதத்திலேயே வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். வரலட்சுமி பூஜை செய்யும் பொழுது, லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி உள்ளிட்டவை பாராயணம் செய்ய வேண்டும்.
வரலட்சுமி விரதத்தின் போது பூஜை அறையை அலங்கரித்து ஒரு கலசத்தில் தேங்காய் வைத்து, அதில் வெள்ளியினாலான அம்மனின் உருவத்தை வைத்து , அதற்கு நகைகள், உடை போட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
பிறகு சுவாமிக்கு தேவையான நெய்வேத்திய பொருட்களை வைக்க வேண்டும். அன்றைய தினம் வயதுக்கு வராத குழந்தைகள், கன்னி பெண்கள், பெண்கள் ஆகியோரை அழைத்து வெற்றிலை பாக்கு தர வேண்டும்.
அவரவர் சக்திக்கேற்ப பிளவுஸ் பிட், ஏதேனும் ஸ்டீல் டப்பா, பிளாஸ்டிக் டப்பா, மஞ்சள், குங்குமம், தேங்காய் , வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், திருமாங்கல்யக் கயிறு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
பெரியவர்கள் யாரேனும் வரலட்சுமி பூஜைக்கு வந்திருந்தால் அவர்களிடம் ஆசி பெற வேண்டும். குங்குமத்தை நெற்றியில் வைத்துவிட சொல்லி திருமாங்கல்யத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் சுத்தபத்தமாக அனைத்தையும் செய்ய வேண்டும். யார் மனதையும் நோகடிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications