1 கற்பூரம் இருக்கா? கற்பூரங்கள் ஏற்றி வைக்க 3 பெஸ்ட் இடங்கள் எது தெரியுமா? 2 கற்பூர சூப்பர் பரிகாரம்
சென்னை: கற்பூரங்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? நம்முடைய வாஸ்து சாஸ்திரத்தில் கற்பூரத்துக்கென சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் என்னென்ன? இதில் ஒருசில டிப்ஸ்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.
கற்பூரத்தை பொறுத்தவரை, இயல்பிலேயே மருத்துவ குணங்கள் அடங்கியது. ஏகப்பட்ட ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்திருப்பவை. எனவேதான், சுவாச பிரச்சனைகளுக்கும், சருமநோய்களுக்கும், தலைமுடி ஆரோக்கியத்துக்கும் கற்பூரங்களை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மனமகிழ்ச்சி: அதேசமயம், ஆன்மீகத்தில் கற்பூரங்களின் முக்கியத்துவம் முதன்மையானவை.. கற்பூரத்தை எரிப்பது என்பது, நம்முடைய வீட்டின் வளிமண்டலத்தையே சுத்தப்படுத்தக்கூடியதாகும்.. அதேபோல, இந்த கற்பூரத்தின் வாசனையும், நம்முடைய வீட்டிற்குள் தெய்வீக உணர்வை ஏற்படுத்திவிடும்.
கற்பூரம் ஏற்றினாலே மனமகிழ்ச்சி உண்டாகும்.. குடும்பத்தில் செழிப்பு காணப்படும்.. அமைதி உருவாகும்.. தம்பதிகளின் பிணக்குகள் விலகும்.. அதேபோல, கற்பூரங்கள் எரிந்து முற்றிலும் அணைந்து, எரிந்து காற்றில் கரைந்துவிடுவதுபோல, இறைவனிடத்தில பக்தியில் கரைந்து, அனைவரும் சரணாகதி அடைய வேண்டும் என்ற நோக்கத்தையே கற்பூரங்கள் உணர்த்துகின்றனவாம்.
நேர்மறை சக்தி: வீட்டில் நேர்மறை சக்திகள் பெருக்க வேண்டுமானால், வீடுகளில் கற்பூரங்கள் ஏற்றுவது அவசியமாகும். வீட்டை சுற்றிலுமுள்ள திருஷ்டியை கழிக்க 1 கற்பூரமே போதும். புதிய வீடு செல்லும்போதும்சரி, அல்லது வேறொருவர் குடியிருந்த வாடகை வீட்டிற்குள் செல்ல நேர்ந்தாலும்சரி, கற்பூரத்தை ஏற்றிவைத்து வழிபட்டுவிட வேண்டும். இதனால், பழைய தீய சக்தியை முழுமையாக அகலும் என்கிறது வாஸ்து.
நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனைத்து சக்திகளும் வீட்டிற்குள் நுழைகிறது. எனவே, வீட்டு வாசலில் தினமும் ஒரு கற்பூரத்தை ஏற்றி வைக்கலாம். இதனால், லட்சுமி தேவியும் வீட்டிற்குள் நுழைந்து, நேர்மறை ஆற்றலை தக்க வைக்கக்கூடும். பூஜையறையிலும் லட்சுமி வாசம் செய்வதால், இங்கு கட்டாயம் கற்பூரம் ஏற்றி வைக்க வேண்டும்.
லட்சுமி வாசம்: சமையலறையிலும் லட்சுமியின் வாசம் உள்ளதால், கற்பூரத்துண்டுகளை அங்கும் வைக்கலாம். இதனால், சமையலறைக்குள் பூச்சிகளும் நுழையாது.. அந்தவகையில், சிறந்த மருத்துவ தன்மையுடனும் செயல்படுகிறது கற்பூரம்.
1 கற்பூரத்துடன் 2 கிராம்பையும் சேர்த்து ஏற்றினால், வீட்டில் கடன்பிரச்சனை தீர சிறந்த பரிகாரமாகும். அல்லது சிகப்பு ரோஜாப்பூவிலும் கற்பூரத்தை ஏற்றி வைத்து, துர்கா தேவிக்கு அர்ச்சனை செய்தாலும், வறுமையும், பணக்கஷ்டமும் நீங்கி, செல்வம் தழைக்கும்.
கற்பூரம்: பெரும்பாலும், பிரம்ம முகூர்த்தத்தில் கற்பூரத்தை ஏற்றினால் சிறப்பு என்கிறார்கள். ஆனால், காலை நேரத்தில் பூஜை செய்யும் பொழுது கற்பூரம் ஏற்றக்கூடாதாம்.. எப்போதுமே காலை நேரத்தில் நெய்விளக்கு அல்லது நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம். மாலையில் வேண்டுமானால், பூஜை செய்யும்போது கற்பூரம் ஏற்றலாம்.. அதேபோல, தென்கிழக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும்.
ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நெய்யுடம் கற்பூரமும் சேர்த்து ஏற்றி வைக்கலாம். இரவு நேரத்திலும், தூங்க செல்வதற்கு முன்பும்கூட, வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் கற்பூரத்தை ஏற்றிவைத்தால், நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.












Click it and Unblock the Notifications