மருதாணி இலை வைக்க சரியான நேரம் எது? மருதாணி செடியை எந்த திசையில் வைக்கலாம்? மருதாணி மரம் பெஸ்ட்
சென்னை: எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மருதாணி செடிக்கு இருப்பதால்தான், வாஸ்துவில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.. எந்த நாளில் வீட்டில் மருதாணி செடியை வைக்கலாம்? பெண்கள் எந்த நேரத்தில் தங்கள் கைகளுக்கு மருதாணி வைத்து கொள்ளலாம் என்பது பற்றிகூட வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பார்கள்.. மருதாணி மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது... வீடுகளில் மருதாணி செடிகளை வைக்கும்போது, எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் வீடு முழுவதும் பரவும்.. திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும்.. சண்டை சச்சரவுகள் இருந்தாலும் நீங்கிவிடும்

மருதாணி மரம்: மருதாணி செடியை வீடுகளில் எந்த திசையிலும் நட்டு வைத்து வளர்க்கலாம். ஆனால், தோஷம் இல்லாத மருதாணி செடி மிகவும் மகத்துவமானது.. ஏனென்றால், மருதாணி மரத்தை வீட்டில் வளர்ப்பது, முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் என்றும் மகிழ்ச்சியை குலைத்துவிடும், உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்பார்கள். எனவே, வீட்டில் மருதாணி மரம் நடுவது மிகவும் அசுபமாகவும் கருதப்படுகிறது.
இப்படி இருவேறு வகையான கருத்துக்கள் நிலவினாலும், அவரவர் விருப்பங்களை பொறுத்தே மருதாணி செடிகள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.. ஆனால் எக்காரணம் கொண்டும் மருதாணி செடிகளை எப்போதுமே காய்ந்து போக விடக்கூடாது. இதனால் வீட்டில் நிம்மதி குறைவு இருக்கும். பட்டுப் போன மருதாணி செடியையும் கண்டிப்பாக வீட்டில் வைத்திருக்கக்கூடாது. மருத்துவ குணம் மிக்க மருதாணி இலைகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே நல்லது.
பணப்பிரச்சனை: பெண்கள் இந்த மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் நெருங்காது.. இதற்கு வேறு எந்த பொருளையும் சேர்க்காமல், வெறுமனே மருதாணி இலைகளை அரைத்து பெண்கள் இட்டுக் கொண்டால், அவர்களது கைகளில் மகாலட்சுமி எப்போதுமே வாசம் செய்வாள். பணப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்காது.
வாகனங்களிலும் இந்த மருதாணி இலைகளுடன் சேர்த்து வேப்பிலைகளையும் வைத்து வைத்துக் கொண்டால், திருஷ்டி தோஷம் நெருங்காது. அதுமட்டுமல்லாமல், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும்பொழுது மருதாணி செடியின் விதைகளையும் சேர்த்து போட்டால், வீட்டில் நல்ல மணம் பரவும்.. அத்துடன், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளும் பலவீனமாகிவிடும். வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.
ராகு காலம்: மருதாணியை இலைகளை பறிப்பதற்கும் உரிய கால நேரம் உள்ளது.. எப்போதுமே மாலையில் 6 மணிக்கு பிறகு தவிர்க்க வேண்டும். அதேபோல, ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களிலும், சந்திராஷ்டமம் போன்ற நேரத்திலும் மருதாணி வைக்கக்கூடாது என்பார்கள்.
வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்கள் மருதாணி வைக்கலாம்.. பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி திதிகளில் பெண்கள் மருதாணி வைப்பது கூடுதல் பலனை தரும். பரணி, பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் மருதாணி வைக்க உகந்த நட்சத்திரங்கள் ஆகும்.
வடக்கு திசை: அதேபோல, மருதாணி இட்டுக் கொள்வதற்கும் திசைகள் உள்ளன.. அந்தவகையில், கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் உட்கார்ந்து மருதாணியை இட்டுக் கொள்ள வேண்டும். அதாவது, மருதாணி வைப்பவர்கள் வடக்கு திசை பார்த்தும், மருதாணி வைத்துக் கொள்பவர்கள் கிழக்கு திசைநோக்கியும் உட்கார்ந்து மருதாணி வைக்க வேண்டும். இப்படி வைப்பதால், மருதாணியின் முழு பலனையும் பெற முடியும்.












Click it and Unblock the Notifications