திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம்! இந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் கிட்ட நெருங்கவே முடியாது!
சென்னை: திருவண்ணாமலையின் உச்சியில் 15 தலைமுறைகளுக்கும் மேலாக தீபம் ஏற்றுவது யார் தெரியுமா? இன்னார்தான் தீபம் ஏற்ற வேண்டும் என சிவபெருமானே நேரில் தோன்று வரம் அளித்ததாக கூறப்படும் தகவல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நினைத்தாலே முக்தி தரும் தலம் இதுவாகும். மாதாமாதம் வரும் பவுர்ணமியின் போது பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு. இந்த மலை பாதையில் ஏராளமான சித்தர்களும் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் கிரிவலப் பாதையில் நிறைய கோயில்களும் உள்ளன. அது போல் ஆண்டுதோறும் இங்கு கார்த்திகை தீபம் விசேஷமாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வருவர். 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
அதாவது ஜோதி வடிவில் சிவபெருமான் காட்சித் தருகிறார். அவர்தான் மலைவடிவில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. திருவண்ணாமலை உச்சியில் ஆண்டுதோறும் தீபத்தை யார் வேண்டுமானாலு்ம ஏற்றிவிட முடியாது. இதற்காக சிலர் இருக்கிறார்கள்.
அவர்கள்தான் பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமே மகாதீபத்தை ஏற்றும் உரிமையை பெற்றுள்ளார்கள். இவர்கள்தான் சுமார் 15 தலைமுறைகளுக்கும் மேலாக தொடர்ந்து தீபம் ஏற்றி வருகிறார்கள்.
எல்லாரும் கிடக்க, இவர்களுக்கு மட்டும் விளக்கு ஏற்றும் உரிமை எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷிகளின் தியானத்தை அசுரர்கள் கலைத்து அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி வந்தனர். அப்போது பிரம்ம ரிஷிகள் கோபப்பட்டால் , அந்த அசுரர்கள் மீன் போல் உருமாறி கடலுக்குள் போய் ஒளிந்து கொள்வர்.
இப்படி தொடர்ந்து இந்த அசுரர்கள் தொல்லை தருவதால் சிவனிடம் ரிஷிகள் முறையிட்டனர். ரிஷிகளின் இன்னலை போக்க சிவபெருமான், பருவதராஜாவை அழைத்தார். கடலில் மீன் உருவத்தில் ஒளிந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.
சிவபெருமானின் உத்தரவை உடனே ஏற்ற பருவதராஜா, கடலுக்குள் சென்று மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து வந்து கரையில் போட்டார். ஆனாலும் அவர் பிடியில் இருந்தும் தப்பிய அசுரர்கள் தப்பி மீண்டும் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பருவதராஜா, பார்வதி தேவியிடம் உதவி கேட்டார்.
அப்போது பார்வதி தேவி, பருவதராஜனை கடலுக்குள் வலை விரிக்க சொல்லி, அதில் சிக்கிய மீன்களை எல்லாம் வாயில் போட்டு அழித்தார். அப்போது அந்த வலையில் கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீன மகரிஷியும் சிக்கினார். அவருடைய தவம் கலைந்ததால், அந்த கோபத்தில் மீன மகரிஷி, பருவதராஜாவை பார்த்து ,என் தவத்தை கலைத்த நீ இனி உன் ராஜ வாழ்க்கை அழிந்து, மீன் பிடித்துதான் இனி உன் பிழைப்பை நடத்த வேண்டும் என சாபமிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பருவதராஜா, நேராக சிவனிடம் சென்று முறையிட்டார். அப்போதுதான் சிவபெருமான், கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி ஸ்வரூமாக காட்சி தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜா வம்சத்தினர்தான் செய்ய வேண்டும். என்னை தரிசிக்க வரும் மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என சொல்லும் போது அந்த புண்ணியமெல்லம் உனக்குத்தான் சேரும் என்றார். அன்று முதல் அந்த வம்சத்தினரே திருவண்ணாமலை தீபத்தை ஏற்றி வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications