அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா? பூஜை செய்யலாமா? ஆன்மீகம் சொல்லும் உண்மை என்ன
சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்கிறார்களே என்ன காரணம் தெரியுமா? அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு வீட்டிலுள்ள பூஜைகளை செய்யலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு திடீரென கோவிலுக்கு போக வேண்டி நேர்ந்தால் என்ன செய்வது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
நம்முடைய உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணத்துக்கு தயிர் அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு தூக்கம் வருவது போல தோன்றும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவது போல தோன்றும்..

மந்தத்தன்மை
அதுபோல அசைவ உணவுகளை சாப்பிடும்போது, அது மந்தநிலையை ஏற்படுத்திவிடும். உடல் மட்டுமல்ல, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.. கோயிலுக்கு செல்லும்போதும் மனம், உடம்பு சுத்தமாக இரக்க வேண்டும். மனதளவில் மந்தத்தன்மையை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் சென்றால், அங்குள்ள சக்திகளை உணர முடியாது..
ஏனென்றால், அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை குறைத்துவிடுமாம். எனவேதான், எளிய உணவுகளை அதாவது விரைந்து ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போக சொல்வார்கள்.
இரக்க குணம்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இரக்க குணம் நிறைந்த இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார் என்பதால் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.
ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பிறகு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது. முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.
பூஜையறை விளக்குகள்
ஆனால், அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் பூஜையறை விளக்குகளையும் ஏற்றக் கூடாது.. மறுநாள் குளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும்.. அசைவம் சாப்பிட்டுவிட்டு பக்தி புத்தகங்களைகூட படிக்க கூடாது என்பார்கள்.
அதுபோலவே, ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. ஒருவேளை பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தாலும், சமைக்கும் நேரங்களில் தவிர்த்துவிட்டு, பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications