கேரள கோயில்களில் என்னதான் இருக்கிறது? அங்கு தரிசிக்க இத்தனை கூட்டம் அலைமோதுகிறதே!
சென்னை: கேரளா கோயில்களில் தரிசனம் செய்ய விரும்புவதன் காரணம் என்ன தெரியுமா? கேரளாவில் சிவன், விஷ்ணு என்ற பேதங்கள் எல்லாம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். கோயிலில் விபூதி, குங்குமத்திற்கு பதிலாக அரைத்த சந்தனத்தை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
இது குறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேரள கோவில்களில் தரிசனம் செய்ய பலர் விரும்புவதின் காரணங்கள்... அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை. ஏன் திருநீறே இல்லை ... மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !! சந்தனம் மட்டுமே பிரசாதம்.. ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!)

தெருவுக்கு ஒரு புதிய கோவில், அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் இல்லை..! கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை... எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம், " இலவச" தரிசனம் கிடையாது...!
தந்திரிகள் , கருவறை பூஜையில் உள்ளோர், இயற்கை உபாதையை கழிக்க வேண்டியிருந்தால்.. மீண்டும் மீண்டும் குளித்த பின்பே கருவறைக்குள் செல்கிறார்கள்(குருவாயூரில் கண்டது )...
கோவில் பிரசாதம் என்று மெதுவடை, புளியோதரை, அதிரசம் என்று கோவிலுக்குள் மினி ஹோட்டல் கிடையாது. கோவில் பிரகாரத்திற்குள், ஏன் வளாகத்திற்குள்ளேயே யாரும் உணவருந்துவதில்லை .
கோவில் வளாகத்திற்குள் அன்னதானக் கூடங்கள் இல்லை... நரேந்திர மோடி வந்தாலும் வேட்டி, மேல் வஸ்திரத்துடன் மட்டுமே அனுமதி...( பத்மநாபசுவாமி ஆலயம்) இந்து அல்லாதவர்க்கு அனுமதி இல்லை (குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணன் கோவில்)
கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!! பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக் கூடாது என்ற கட்டுபாடு உள்ளது. எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்..!! சிறப்பு தரிஸணம் கட்டணம் ஏதும் கிடையாது.. ஏன்? பொதுவாகவே கட்டணமே கிடையாது!!
அர்ச்சகர்கள் இரண்டு வேளையும் குளித்துவிட்டுதான் கருவறைக்குள் செல்வார்கள். பூஜை முடியும் வரை யாருக்காகவும், எதுக்காகவும் பூஜையை பாதியில் நிறுத்துவதில்லை!! அரைத்த சந்தனம்தான் சாற்றுவார்கள். பக்தர்கள் யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு கோவிலை சுற்றி எங்குமே விளக்கு ஏற்ற முடியாது.. கோவிலில் எரியும் பொதுவான விளக்கிலேயே கொண்டுவந்த எண்ணெய்யை விட்டுவிட வேண்டும்..
அதிகாலை நிர்மால்ய தரிஸணம் உண்டு!! பூஜைநேரத்திற்கு பூஜை செய்துவிடுவார்கள். பூஜைக்கு கட்டணம் செலுத்தியவர்கள் கோவில் நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.. இல்லையேல் அவர்களுக்காக காத்திருந்து பூஜை செய்ய மாட்டார்கள்!!
வெளியிலிருந்து கொண்டுவரும் பூக்களையோ, மாலைகளையோ, பிரஸாதங்களையோ, கருவறைக்குள் அனுமதிப்பல்லை!! அர்ச்சர்கள் கோவிலை விட்டு வேறு எங்கும், யார் வீட்டுக்கும் பூஜைக்கு கோவில் நேரத்தில் செல்வதில்லை!! கோவில் சாற்றும்வரை சன்னதியிலேயே அர்ச்சர்கள் இருப்பார்கள்!! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications