Naga Panchami 2025: இன்று நாக பஞ்சமி! நாக தேவதைகளுக்கு எந்த நேரத்தில் பால் ஊற்றலாம்?
சென்னை: நாக பஞ்சமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாக உருவங்களுக்கு எப்போது பாலாபிஷேகம் செய்யலாம் என்பதை கண்டறியலாம். நாக பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நாக பஞ்சமி 2025, ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று நாக பஞ்சமி கொண்டாடப்பட உள்ளது.

ஜூலை 28-ம் தேதி நாக சதுர்த்தி நடந்து முடிந்தது. அன்றைய தினமே ஆடிப்பூரமும் நிகழ்ந்தது. இந்த நிலையில் இன்று நாக பஞ்சமி கொண்டாடப்பட உள்ளது. நாக பஞ்சமியை, கருட பஞ்சமி என்றும் வைணவ தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை 01.23 மணிக்கு தொடங்கி, ஜூலை 30ம் தேதி (நாளை)அதிகாலை 02.29 வரை பஞ்சமி திதி உள்ளது.
நாக பஞ்சமி விரத, வழிபாட்டு முறைகள்
காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ நாகங்களின் உருவங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். காய்ச்சாத பசும் பால் கொண்டு, தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் படைத்து வழிபடுவார்கள்.
நாகத்துடன் இருக்கும் சிவலிங்கம், இரண்டு நாகங்கள் பின்னிய படி இருக்கும் உருவங்களுக்கு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது உண்டு.
நாக பஞ்சமியில சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
1. "ஓம் சர்ப்பேப்யோ நமஹ..!!"
2. "ஓம் நமஹ சிவாய..!!"
3. "ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம், உருவருக்மிவ பந்தனன் மிருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்..!!"
நாக பஞ்சமி ஏன் கொண்டாடுறோம்?
நாக பஞ்சமி, பாம்புகளுக்கு நன்றி செலுத்தும் நாள் ஆகும். பாம்புகள் விவசாயிகளுக்கு நண்பர்கள். வயலில் இருக்கும் எலிகளை பாம்புகள் சாப்பிட்டு, பயிர்களை காக்கின்றன. ஆன்மிக ரீதியாக பார்த்தால் அம்பிகை, மகாவிஷ்ணு, சிவ பெருமாள், விநாயகர், முருகன் என அனைத்து தெய்வங்களுடனும் பாம்புகள் இருக்கும். அதனால் தெய்வீக அம்சம் கொண்ட நாகங்களை தெய்வங்களாக வழிபட்டால், அடுத்து வரப் போகும் மழைக் காலத்தில் அவைகள் நமக்கு தீங்கு செய்யாமல் இருக்கும். அதோடு நாக தேவதைகளை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற்றால் ஜாதகத்தில் இருக்கும் நாக தோஷங்கள் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நாக பஞ்சமி அன்று விரதம் இருந்தால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. விரதம் இருப்பவர்கள் ஒரு வேளை மட்டுமோ அல்லது பால், பழம் மட்டுமோ சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். இதனால் திருமணத் தடை, திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள், குழந்தைப்பேறு தாமதமாவது உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும் .
நாகங்களை வழிபட்டால் தெய்வங்களுடன் இருக்கும் நாகங்கள், நம்முடைய கோரிக்கைகளை தெய்வங்களிடம் சொல்லி, அவை விரைவில் நிறைவேற ஆசி வழங்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications