சபரிமலைக்கு செல்லும் போது "போய்ட்டு வரேன்னு" யாரும் சொல்ல மாட்டாங்க! ஏன் தெரியுமா?
சபரிமலை: சபரிமலை ஐயப்பனை காண இருமுடி அணிந்து கொண்டு செல்லும் போது யாரும் போய்ட்டு வரேன் என தன் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு செல்லமாட்டார்கள். இது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கார்த்திகை மாதம் என்றாலே அது ஐயப்பனுக்குரியது. அந்த வகையில் ஐயப்பனின் அற்புதங்கள் குறித்தும் மலைக்குச் செல்லும் போது சில வழிமுறைகள் பின்பற்றப்படுவதற்கான காரண காரியங்கள் குறித்தும் சில நாட்களாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று முக்கியமானது என்னவெனில், பொதுவாக யார் எங்கு சென்றாலும் போய்ட்டு வரேன், என சொல்வார்கள். "நான் போறேன்" என சொல்லக் கூடாது. இது சுபச் சொல் கிடையாது என்பதால் விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இது போன்ற வார்த்தையை பயன்படுத்தவே மாட்டார்கள்.
என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்ற வருத்தம் கூட சிலருக்கு ஏற்படும். அந்த அளவுக்கு நேசமானவர்களுக்கு இந்த வார்த்தை முக்கியமானதாகும். பொதுவாக கெட்டதுக்கு யார் வீட்டிற்காவது சென்றுவிட்டு திரும்பும் போது போய்ட்டு வரேன் என சொல்லக் கூடாது.
ஒரு நல்ல நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்தால் நான் போய்ட்டு திரும்பியும் வரேன் எனலாம். ஆனால் சாவு நடந்த வீட்டிற்கு செல்லும் போது இது போன்ற வார்த்தையை பயன்படுத்தவ கூடாது. எனினும் சபரிமலைக்கு செல்லும் போது இருமுடி அணிவோர் யாருமே தங்கள் சொந்த பந்தங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் செல்வார்கள். இது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து world of priyalakshmanan தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சபரிமலையில் செல்வோர் எதற்காக குடும்பத்தினரிடம் போய்ட்டு வரேன் என சொல்வதில்லை என்பது தெரியுமா? அதாவது எல்லாம் அவன் செயல், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எல்லாமே ஐயப்பனை நம்பி மட்டுமே உள்ளது என்பதால் குடும்பத்தினரிடம் சொல்லாமலேயே கிளம்புவார்கள். மனிதருக்குள் கடவுள் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே சாமிகள் இருமுடி அணிவதற்கு முன்பாக ஒருவர் மற்றவர் காலில் விழுந்து வணங்குகிறார்கள். அதாவது உனக்குள்ளும் கடவுள் இருக்கிறார். எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்.
என்னை நீ வணங்கு, உன்னை நான் வணங்குகிறேன் என்பதே அதன் உள்ளர்த்தம். காலில் விழும்போது வயது, அந்தஸ்து, ஜாதி, ஏழை பணக்காரன் உள்ளிட்ட பாகுபாடுகள் அனைத்துமே அடிபட்டுவிடும். இது அனைவரும் சமம் என்ற நிலையை மனதளவில் உணர்த்திவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டு இருமுடி அணிந்து செல்லும் போதும் கோயிலில் இருந்து வீடு திரும்பும் போதும் தேங்காய் உடைப்பது ஏன், மலைக்கு போய்ட்டு வரும் வரை ஏன் விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications