பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?
சென்னை: பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் தீபகொலுசு, மணி, பஞ்ச பாத்திரம், ஊதுபத்தி ஸ்டான்ட் உள்ளிட்டவை வெள்ளியிலோ அல்லது செம்பிலோ இருக்கும். ஆனால் யார் வீட்டிலும் எவர் சில்வரில் பூஜை பாத்திரங்கள் இருக்காது ஏன் தெரியுமா?
ஒரு வீட்டின் அழகு என்பதை பூஜை அறையை வைத்துதான் முடிவு செய்வார்கள். வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கிறதா என்பதையும் பூஜை அறையே காட்டுகிறது. வீட்டில் நன்மைகள் அதிகம் கிடைக்க வேண்டுமாயின் பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் சரியாக இருக்க வேண்டும்.

கோயிலாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி பூஜை செய்வதற்கென சில வரன்முறைகள் இருக்கின்றன. அதன்படிதான் எல்லாம் செய்ய வேண்டும். பூஜை அறை என்பது இறைவன் குடியிருக்கும் இடம். எல்லாவற்றுக்கும் மேலாக பாசிட்டிவ் வைப்ஸ் நிறைந்திருக்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது.
அதனால்தான் வீடு கட்டும்போது பூஜை அறை எப்படி இருக்க வேண்டும். எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை பார்த்து பார்த்து கட்டுகிறோம். அது போல் சாமி படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திர முறையும் இருக்கிறது. இதன்படி முழுமையாக கட்டிவிட்டு பூஜை அறையில் சில ஒவ்வாத பொருட்களை வைத்தால் அதுவும் தவறுதான்.
பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் விசேஷமானவை. அவை பூஜை முடிந்தாலும் பூஜை அறையில்தான் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் தாம்பால தட்டு, விளக்கு, தீபகொலுசு, மணி, பஞ்ச பாத்திரம் ஆகியவை எந்த உலோகத்தால் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
இவை வெள்ளியிலோ தங்கத்திலோ ஐம்பொன்னிலோ இருப்பது அவரவர் வசதியை பொருத்தது. ஆனால் வசதி இல்லாதவர்கள் செம்பு அல்லது பித்தளையால் செய்யப்பட்ட பூஜை சாமான்களை பயன்படுத்த வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு எவர்சில்வரில் பயன்படுத்தவே கூடாது. மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை கூட பயன்படுத்தலாம்.
பொதுவாக பூஜை பொருட்கள் செய்யப்படும் உலோகங்களுக்கு இறை சக்தியை ஈர்க்கும் தன்மை உள்ளது. ஆனால் எவர்சில்வரில் இறை சக்தியை ஈர்க்கும் தன்மை கிடையாது, அந்த சக்தியை வெளியிடும் தன்மையும் கிடையாது. எனவே தெய்வ வழிபாட்டுக்கு எவர்சில்வரை பயன்படுத்தக் கூடாது.
எவர்சில்வர் பாத்திரத்தில் நெய்வேத்தியம் செய்யக் கூடாது. ஹோமம் செய்யும் போது அதற்கான பொருட்களை வைக்க எவர்சில்வர் தட்டு அல்லது கிண்ணங்களை பயன்படுத்தவே கூடாது. பூஜை அறையில் தீர்த்தம் வைக்க எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications