நாக பஞ்சமியான இன்று பாம்புகள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
சென்னை: நாக பஞ்சமி நாளில் பாம்புகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இது நல்லதை கொடுக்குமா இல்லை கெட்டதா? நாக பஞ்சமி இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் தலையில் பாம்பு அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். எப்பேர்பட்ட வீரர்களும் பாம்பை எதிர்கொள்ளவோ அதை விரட்டவோ அடித்துக் கொள்ளவோ அஞ்சுவார்கள். ஏனென்றால் அதை தெய்வமாக பார்க்கிறார்கள். மேலும் அதிக விஷத்தன்மை இருப்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு பாம்புகளால் ஆபத்து இருக்கிறது.

இன்றைய தினம் நாக பஞ்சமி தினம் என்பதால் உங்கள் கனவில் பாம்பு வந்துவிட்டால் என்னென்ன பலன்களை என்பதை பார்க்கலாம்.
கனவில் யார் தலையிலாவது பாம்பு அமர்ந்திருப்பது போல் தெரிந்தால் முன்னோர்களின் அருள் அவர் மீது இருக்கிறது என அர்த்தம். அவர் தினமும் நாக ஸ்தோத்திரத்தை சொல்ல வேண்டும். புதையலை காக்கும் பாம்பை கண்டால் கனவு காண்பவருக்கு விரைவில் பணம் கொட்ட போகிறது என்று அர்த்தம்.
ஆண் பாம்பும் பெண் பாம்பும் பின்னி பிணைந்திருப்பது போல் வந்தால் அது கெட்ட சகுனம். அதாவது கால சர்ப்ப தோஷம் இருப்பதாக அர்த்தம். பாம்பு உங்களை கடிப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு விபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம். கனவில் கருநாகம் வந்தால் அதுவும் காலசர்ப்ப தோஷம் இருப்பதற்கான அறிகுறியாகும்.
அது போல் பாம்பு கனவில் வந்தாலே குலதெய்வ வழிபாட்டை நமக்கு நினைவுப்படுத்தவும் வரும். இல்லாவிட்டால் நேர்த்திக் கடன் செலுத்த வேண்டியிருந்தாலும் பாம்புகள் கனவில் வரும். பாம்புகள் உங்களை விரட்டுவதை போல் கனவு கண்டால் உங்கள் வீட்டில் வறுமை ஏற்பட போகிறது என அர்த்தம். உங்கள் கால்களை பாம்பு சுற்றியது போல் கனவு கண்டால், சனி பகவான் பிடிக்க போகிறார் என்று அர்த்தம்.
கனவில் பாம்பு கடித்தால் அது நல்ல சகுனம் ஆகும். அதாவது வறுமை நீங்கி கடன் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் வீட்டுக்குள் இருந்து பாம்பு வெளியேறுவது போல் கனவு கண்டால், ஏதோ நேர்த்திக் கடனை நீங்கள் செய்யாமல் விட்டுவிட்டதாகவே அர்த்தம். இதே அந்த பாம்புகள் உங்களுக்கு குடை பிடிப்பது போல் இருந்தால் தெய்வத்தின் அனுசரணை உங்கள் மீது உள்ளது என்று அர்த்தம்.
பாம்பு உங்கள் மீது ஏறி சென்றால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க போகிறது என்று அர்த்தம். கனவில் பாம்பை கொன்றுவிட்டாலோ இல்லை இறந்த நிலையில் பாம்பை கண்டாலோ ஆபத்து விலகிவிட்டது என அர்த்தம். பாம்பை கையில் பிடிப்பது போல் கனவு கண்டாலும் அது சுபமானதுதான்.
பாம்பு கிரகங்கள் என சொல்லப்படும் ராகு, கேது ஆகியவற்றால் தோஷங்கள் ஏற்பட்டு பல விதமான தடைகளும் ஏற்படுகின்றன. நாக பஞ்சமி நாள் அன்று விரதமிருந்து நாகத்தை தெய்வமாக வழிபட்டால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதாவது ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால் நம்முடைய வீட்டில் எந்த சுப காரியமும் நடைபெறாது. நம்முடைய ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications