புது வாகன டயருக்கு அடியில் எலுமிச்சம்பழம் ஏன்? கால்நடை பயணங்களில் எலுமிச்சையை வைக்க சூப்பர் காரணம்
சென்னை: புதிதாக வாகனங்கள் வாங்கினால், டயருக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைக்கிறார்கள்.. லட்சக்கணக்கில் வண்டி வாங்கினாலும், 1 ரூபாய் எலுமிச்சம் பழம் வைக்கக் என்ன காரணம்? அன்றைய தினம், கால்நடை வாகனங்களில் எலுமிச்சையை முன்னோர்கள் பயன்படுத்தியதன் அறிவியல் காரணங்கள் என்ன தெரியுமா?
எலுமிச்சம்பழங்களை பொறுத்தவரை ஆன்மீகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கனியாகும்.. இந்த பழம் புதன், சந்திரனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. எலுமிச்சம் பழத்திலுள்ள புளிப்பு, புதன் கிரகத்தை சரிசெய்யக்கூடியது.. அதேபோல, பழத்திலிருக்கும் சாறு சந்திரனின் அடையாளமாக அறியப்படுகிறது.

எதிர்மறை தன்மை: எதிர்மறை தன்மையை குறைக்கும் சக்தி, எலுமிச்சம் பழங்களுக்கு உள்ளது.. அதுமட்டுமல்ல, புதிதாக உள்ள எந்த பொருளையும் சுற்றி அதிகபட்சமாக எதிர்மறை அதிர்வுகள் காணப்படுமாம்.. எனவேதான், வாகனம் மட்டுமல்லாமல், எந்தவொரு ஒரு புதிய பொருளின் அருகேயும் எலுமிச்சை வைத்திருப்பார்கள்.. இதனால், அப்பொருளை சுற்றியுள்ள எதிர்மறை அதிர்வுகள் விலகிவிடும்.. அத்துடன் ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரனின் நிலையும் வலுப்பெறும்.
புதிய வாகனம் வாங்கினாலும், அதன் டயருக்கு அடியில் எலுமிச்சையை வைத்தால், கண் திருஷ்டி படாமல் இருக்கும்.. மேலும், எலுமிச்சையை அழுத்திவிட்டு, புதிய வாகனத்தை இயக்கி செல்லும்போது, மேற்கொள்ளப்படும் பயணமும், எந்த தடையுமின்றி வெற்றிகரமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
மோட்டார் வாகனங்கள்: ஆனால், மோட்டார் வாகனங்கள் அவ்வளவாக பயன்பாடு இல்லாத அன்றைய காலகட்டங்களில், மாட்டு வண்டி, குதிரை வண்டி, கழுதை பயன்பாடு போன்றவற்றையே மனிதர்கள் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தினார்கள்..
அப்படி கால்நடைகளை பயன்படுத்தும்போது, அவற்றின் கால்களில் கற்கள், முட்கள் குத்தி காயங்கள் ஏற்பட்டு, கிருமி தொற்று பரவிவிடும். இந்த தொற்று மாடு, குதிரைகளுக்கு பரவாமல் இருப்பதற்காகவே, எலுமிச்சையை மிதிக்க வைத்து அழைத்து சென்றிருக்கிறார்கள்.. இதனால், கால்நடைகளுக்கும் முழு பாதுகாப்பு கிடைத்தது.. எப்பேர்பட்ட கிருமிகளையும் அழித்து, காயங்களையும் குணமாக்கி, தொற்றுக்களையும் பரவ செய்யாமல் உதவுவது எலுமிச்சையாகும்.
கண் திருஷ்டி: இந்த பழக்கம்தான் நாளடைவில், டயருக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைக்கும் பழக்கமாக மாறியிருக்கிறது.. இதனால் எந்த தொற்று நோய்களும் அழிய வாய்ப்பில்லை என்றாலும், புது வாகனங்களுக்கு அடியில், எலுமிச்சையை வைத்து நசுக்கும்போது கண் திருஷ்டி கழிவதாக நம்பப்படுகிறது.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications