ஒரே குலதெய்வம் கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா?
சென்னை: பெண் திருமணமானதும் கணவரின் குலதெய்வதை பின்பற்றுகிறார். ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி இது தவறு. அது போல் ஒரே குலதெய்வங்களை கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் ஜோதிடம் சொல்கிறது.
குவோராவில் அறிவோம் ஆன்மீகம் என்ற ஐடியில் இருந்து வெளியான பதிவில் கூறியிருப்பதாவது: குலதெய்வம் பற்றிய ஜோதிட ரகசியங்கள்.
எட்டாமிடத்தில் அறியாத மற்றும் அழியாத சிறப்புகள்!

✅️ ஒரு பெண் திருமணமான உடன் தன் தாய் வழி குல தெய்வத்தை மறந்து விடுகிறாள், கணவனின் குல தெய்வமே பிரதானமானது முக்கியமானது இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
✅️ ஆணை பொருத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே ஒரு குலதெய்வம் தன்னுடைய தந்தை முன்னோர்கள் காட்டிய தெய்வமே ஆகும்.
பதிவை புரிந்து கொள்வது சற்றை கடினம் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.
✅️ எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் குலதெய்வம் என்கிறோம். ஒரு பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தை மாங்கல்ய பலம் என்றும் ஆண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தை ஆயுள் காலம் என்றும் தீர்மானிக்கிறோம்.
✅️ ஒரு ஆணானவர், தன் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய தன் ஆயுள் விருத்தி அடையும் என்று பலருக்கும் தெரியவில்லை, காரணம் என்னவெனில் நான்காம் இடம் தாய் ஸ்தானம் ஆகும். இந்த நான்காம் இடத்திற்கு ஐந்தாம் இடமே எட்டாம் இடமாகும், ஒரு ஆணிற்கு மாறாக தசா புத்தி நடக்கிறது. கண்டங்கள் வருகிறது என்றால் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய அனைத்து கண்டங்களிலிருந்தும் தப்பிக்கலாம்.
✅️ இது ஒரு பெண்ணானால் தன் தாயின் குலதெய்வத்தை வழிபாடு செய்ய தீர்க்க சுமங்கலியாகவும் ஊர் போற்றும் உத்தமியாகவும் பதிவிரதையாகவும் விளங்குகிறாள். பெண் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் தான் பூர்வ புண்ணிய ஸ்தானமாக பிறகு என்ன கவலை என்று எண்ணாமல் நான்குக்கு ஐந்தாம் இடம் அதாவது மாங்கல்ய பலன் என்று சொல்லக் கூடிய எட்டாம் இடத்தை தன் தாயின் தாய் குலதெய்வத்தை வழிபாடு செய்ய மாங்கல்ய பலம் விருத்தி அடைகிறது.
✅️ நமக்குள் அண்ணன், தம்பி, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, அம்மா, சித்தி, மாமா, மைத்துனர், அத்தை இப்படியான பல உறவுகள் இருப்பது போல பெண் கொடுத்து எடுப்பதிலும் குலதெய்வத்திற்கான உறவுகளையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது சிறப்பானதாகும் வாழ்க்கை வளமையானதாக்கும். ஒரே குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் அண்ணன் தங்கை முறையாக இது அதர்மம் ஆகும்.
இந்து தர்மபடி இது தவறான செயலாகும், காதல் எல்லாருக்கும் தான் வருகிறது. விலங்கினங்களை போல் அல்லாமல் மனிதன் மட்டும் ஏன் ஒழுங்கு முறைக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும், காரணம் மனிதன் விதிப்படி வாழ வேண்டும்.
✅️ஆகவே பெண்ணானவள், திருமணமான பிறகு தன் தாயின் குலதெய்வத்தை வருடத்திற்கு ஒருமுறை சென்று பெரிதாக ஒன்றும் செய்யாவிட்டாலும் ஒரு விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். இருண்டு போன எட்டாம் இடம் பிரகாசிக்கும். தங்கள் கணவர் எவ்வளவு பெரிய அயோக்கியராக இருந்தாலும் இந்த வழிபாட்டு மூலம் திருந்தலாம். ஆண் ஆனவர்கள் தன் தாயின் குல தெய்வத்தை வழிபாடு செய்ய நோய் நொடியில் இருந்து கஷ்டங்களில் இருந்து துன்பங்களில் இருந்து எளிதாக விடுபடலாம்.
பிறகு என்ன எட்டாம் இடத்திற்கு டாட்டா...!!!
இனி அதிர்ஷ்டம் தான்..!!
( இந்த இடத்தில் விதிகளுக்கும் விதிவிலக்குகளுக்கும் இடமே இல்லை. எந்த கிரகம் எங்கு இருந்தாலும் சரி நேர்கண்ட பதிவு அடிப்படையில் உங்கள் தாய்வழி குலதெய்வத்தை வழிபாடு செய்வது அதி உத்தமமானது) இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications