திருப்பரங்குன்றம் கோயிலில் துவங்கியது யாகசாலை பூஜை.. ஜூலை 14 இல் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை மங்கள இசை இசைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சூரியனிடமிருந்து அக்னி எடுக்கும் நிகழ்ச்சியும், கலாகர்சனம், யாகசாலை நிர்மாணமும் நடைபெற்றது. தற்காலிக மூலவர் சன்னதியில் தங்கம், வெள்ளியினாலான குடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டது.

புண்ணியாகவாசனம், முளைப்பாரி இடிதல் நிகழ்ச்சிக்குப் பின்னர் காப்பு கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல் கால யாகசாலை பூஜை நேற்று மாலை தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜையை தருமை ஆதினம் நட்சத்திர குருமணி கயிலை மாசிலாமணி தேசிகர், கூனம்பட்டி ஆதினம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த 8 கால யாகசாலை பூஜையானது கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜூலை 14 ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம் செய்யப்படும். பின்னர், யாக சாலை பூஜை செய்யப்படும். அங்கிருந்து புனிதர் குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 5.25 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு 25 குண்டங்கள், சத்யகிரீஸ்வரருக்கு 9 குண்டங்கள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு 9 குண்டங்கள், கற்பக விநாயகருக்கு 5 குண்டங்கள் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமிகளுக்கு வெள்ளிக் குடங்கள், பித்தளை சொம்புகள், பித்தளைக் குடங்களில் புனிதநீர் நிரப்பி யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு வருகின்றன. 96 வகையான மூலிகைகள், திரவியங்கள், ஒன்பது வகையான சமித்துகள் உள்ளிட்டவை வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த யாகசாலை பூஜையில் சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள், நாதஸ்வர கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஓதுவார், சிவாச்சாரியரிடையே தள்ளுமுள்ளு
இந்த யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற பிரச்சனை கிளம்பியுள்ளது. யாகசாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ் பெண் ஓதுவார்கள் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த சிவாச்சாரியர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், ஓதுவார்களுக்கும், சிவாச்சரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து பெண் ஓதுவார் ஒருவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால், அந்த யாகசாலையில் தமிழ் வேள்வியாளர்கள் இல்லை. இதனை ஆய்வு செய்வதற்காகச் சென்றபோது அங்கிருந்த சிவாச்சாரியார்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். பிராமண சமஸ்கிருத வேள்வியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தமிழ் வேள்வியாளர்களை யாகசாலை பூஜைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications