TCS வேலைவாய்ப்பு.. பிசிஏ, பிஎஸ்சி படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய இன்று (அக்டோபர் 13) கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோருக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்வு என்பது நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ். இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite & Smart Hiring Batch - 2024 என்ற பெயரில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி, B.Voc பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் B.Voc என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்களும், பிஎஸ்சி என்றால் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சயின்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் அனைவரும் 2024ம் ஆண்டில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்களால் பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியாது. பணிக்கு விண்ணப்பம் செய்து தேர்வில் தேர்ச்சியடைவோருக்கு டிசிஎஸ் சார்பில் பயிற்சி என்பது வழங்கப்படும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி Cloud, Blockchain, AR/VR/XR, AI/ML/GenAI, robotics, Digital Engineering உள்ளிட்டவை சொல்லி தரப்படும்.
அதோடு கிராசூவேட் இன்ஜினியரிங் டீமுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி உயர்படிப்புக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதாவது இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழங்களில் PG டிகிரி முடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் TCS Ignite முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு கிடைக்கும்.
அதேவேளையில் TCS Smart Hiring முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு டெக்னோ ஃபங்சனல் ரோல் (Techno Functional Role) பணி வழங்கப்படும். இன்ஜினியரிங், குவாலிட்டி அசூரன்ஸ், டே்டா அனலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதுதொடர்பான டெக்னிக்கல் ஸ்கில்ஸ் சார்ந்த பயிற்சி என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 13ம் தேதிக்குள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று விண்ணப்பம் செய்து கொள்ளலாம். . இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு ஆன்லைனில் நடக்காது. தேர்வு மையங்களில் வைத்து தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு என்பது 2 மணிநேரம் இருக்கும்.
இந்த தேர்வில் Numerical Ability, Verbal Ability, Reasoning Ability, Coding (Optional) அடிப்படையில் கேள்விகள் என்பது இருக்கும். மேலும் இந்த பணியிடங்கள் First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம்.
மேலும் தேர்வு மையத்தை ஒருமுறை தேர்வு செய்தால் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வது தொடர்பான முழுவிபரம் கீழே உள்ள லிங்க் மூலம் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications