Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடும் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன்.. வெளியான ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொபைல் கட்டணங்களை மேலும் 10 - 20 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது என்றும், இது ஆறு ஆண்டுகளில் நான்காவது பெரிய கட்டண உயர்வாக இருக்கக்கூடும் என்றும் பெர்ன்ஸ்டீன் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Airtel Jio Vodafone Idea to Hike Tariffs by 10 20 by Late 2025 Amid 5G Rollout

ரீசார்ஜ் கட்டண உயர்வு

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஏர்டெல் உள்ளது. மூன்றாவது இடத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் உள்ளது. இந்நிலையில், 3 நிறுவனங்களுமே கடந்த ஆண்டு அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அமல்படுத்தின.

ஜியோ நிறுவனத்தில் மலிவு விலையில் இருந்த பிளான்கள் முதல் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. 28 நாள் வேலிடிட்டி கொண்ட பிளான்களை பொறுத்தவரை தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.155 பிளான் ரூ.189 ஆக உயர்த்தப்பட்டது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.209 பிளான் ரூ.249 ஆக உயர்த்தப்பட்டது. தினமும் 1 .5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.239 பிளான் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.299 பிளான் ரூ.349 ஆக உயர்ந்தது.

தினமும் 2 .5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.349 பிளான் ரூ.399 ஆகவும், தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.99 பிளான் ரூ.449 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ஆண்டு கட்டணத்தை பொறுத்தவரை 365 நாள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.2,999 பிளான் ரூ.3,599 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் 24 ஜிபியுடன் 336 நாள் வேலிடிட்டி வழங்கும் ரூ.1,559 பிளான் ரூ.1,899 ஆக அதிகரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலையில்

இந்த கட்டண உயர்வு கடந்த ஆண்டு ஜூலை 3 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவித்தன. 11 முதல் 25 சதவீதம் வரையல் கட்டண உயர்வு இருந்தது. அதன்பிறகு ரீசார்ஜ் பிளான்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இந்த ஆண்டு இறுதியில்

இந்த 2025 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என பெர்ன்ஸ்டீன் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தொழில்துறை முழுவதும் நடந்து வரும் கட்டண மாற்ற முயற்சிகளுக்கு ஏற்ப, நவம்பர்/ டிசம்பர் 2025 இல் கட்டண உயர்வு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கை தொலைத்தொடர்புத் துறைக்கான வருவாய் தெரிவுநிலையை மேம்படுத்தக்கூடும் என்று பெர்ன்ஸ்டீனின் ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

கட்டண உயர்வு எவ்வளவு இருக்கும்?

பார்தி ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் நகர்ப்புற 5G கவரேஜை முழுமையாக்க உள்ள நிலையில், ஆபரேட்டர்கள் மற்றும் வருவாய் விகிதத்தின் முன்னேற்றத்திற்கு கவனம் செலுத்தி வருகின்றனர். அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் 5G உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் செலவுகளை ஈடுகட்ட கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 5G நெட்வொர்க் அனைவருக்கும் கிடைக்கும்போது நுகர்வோர் தேவை அதிகரித்து, ​​தொழில் படிப்படியாக வளர்ந்து வருமானத்தையும் காண வேண்டும். அதற்கேற்ப கட்டண விகிதங்கள் மாற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 - 20% வரை கட்டண விகிதங்களில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது பெரிய கட்டண உயர்வாக இருக்கக்கூடும் என்றும் பெர்ன்ஸ்டீன் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+