ஆப்பிள் வரலாற்றில் முதல்முறை! ஐபோன் ப்ரோ மாடல்களுக்கு தள்ளுபடி.. ரேட் மேலும் குறைய வாய்ப்பு?
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் தனது பல்வேறு மொபைல் மாடல்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் இதுவரை தனது ப்ரோ மாடல்கள் விலையைக் குறைத்ததே இல்லை. ஆனால், இப்போது முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் ப்ரோ மாடல்கள் விலையைக் குறைத்துள்ளன. அதிகபட்சமாக ரூ.6000 வரை ஐபோன்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
என்ன தான் இங்கு ஏகப்பட்ட மொபைல் நிறுவனங்கள் இருந்தாலும் கூட ஐபோன்களுக்கு இருக்கும் வரவேற்பு எப்போதும் தனி தான். ஆண்டுக்கு ஒரு சீரியஸை மட்டுமே வெளியிட்டாலும் ஐபோன்கள் மவுசு குறையாது.

மேலும், விலை அதிகம் என்றாலும் கூட கெத்திற்காகவே ஐபோன் வாங்குவோருக்கும் அங்கு இருக்கவே செய்கிறார்கள். இதன் காரணமாகவே ஐபோன்கள் உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது.
ஐபோன்: இதற்கிடையே இப்போது நமது நாட்டில் ஆப்பிள் நிறுவனம் அதன் எல்லா ஐபோன் மாடல்களின் விலைகளையும் 3-4% குறைத்துள்ளது. இதன் மீலம் ஐபோன் ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை ₹5100 முதல் ₹6000 வரை குறைந்துள்ளன. ஐபோன் 13, 14 மற்றும் 15 உள்ளிட்ட மாடல்களின் விலை ரூ.300 குறைந்துள்ளதாகவும் ஐபோன் எஸ்இ மாடல் விலை ரூ.2300 குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்முறை: ஆப்பிள் தனது வரலாற்றில் இதுவரை ப்ரோ மாடல்களின் விலையைக் குறைத்ததே இல்லை. இதற்கு முன்பு வரை புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டால் ஏற்கனவே சந்தையில் இருக்கும் பழைய ப்ரோ மாடல்களை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திவிடும். ஏற்கனவே டீலர்களிடம் இருக்கும் ப்ரோ மாடல்கள் மட்டுமே தள்ளுபடி விலையில் விற்கப்படும். அதுவும் டீலர்கள் தரும் சலுகையாகவே இருக்கும். ஆப்பிள் நிறுவனம் தானாக எந்தவொரு சலுகைகளையும் அறிவிக்காது. ஆனால், முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் இப்போது அதன் ப்ரோ மாடல்களின் விலையைக் குறைத்துள்ளது.
என்ன காரணம்: கடந்த ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் மொபைல் போன்களுக்கான இறக்குமதி சுங்க வரியை 20%இல் இருந்து 15%ஆகக் குறைத்து இருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது ஆப்பிள் ப்ரோ மாடல்களின் விலை குறைந்துள்ளது. மொபைல் போன்கள் தவிர, மொபைல் ஃபோன் சார்ஜர்கள் மற்றும் மொபைல் ஃபோன் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளுக்கும் சுங்க வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்தே இப்போது ஆப்பிள் நிறுவனம் தனது மாடல்கள் விலையை குறைத்துள்ளன. ஐபோன் 15 விலை ரூ.300 மட்டுமே குறைந்துள்ளது. அதேநேரம் ஐபோன் ப்ரோ விலை ரூ.5100 வரை குறைந்துள்ளது. முன்பு 128ஜிபி மொபைல் ரூ.134,900க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது அது ரூ129,800ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மாடல்கள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 டிபி விலை ரூ.1.99 லட்சமாக இருந்த நிலையில், அதன் விலை ரூ.1.93 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு இருக்கு: இது ஐபோன் வழங்கும் சலுகையாகும். இது போக வரும் பண்டிகை காலத்தில் டீலர்களும் தனியாகச் சலுகைகளைத் தருவார்கள் என்பதால் ஐபோன்கள் விலை மேலும் குறையவே வாய்ப்பு இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications