உங்ககிட்ட ஐபோன் இருக்கா? ஆப்பிள் நிறுவனமே தேடி வந்து ரூ.10000 கொடுக்கும்.. எப்படி பெறுவது? ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வந்தாலும்.. அதன் மாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பழைய தமிழ் படங்களில் வில்லன் மரு வைத்துக்கொண்டு வருவது போல ஐபோன் 11க்கு பின் வரும் போன் எல்லாமே மரு வைத்து சில சில மாற்றங்களுடன் மட்டுமே வந்துகொண்டு இருக்கிறது.

apple chennai apple iphone

செப்டம்பர் 13 ஆம் தேதி ப்ரீ ஆர்டர்கள் தொடங்கி, செப்டம்பர் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனை தொடங்க உள்ளது. இதன் விற்பனை தொடங்கும் நிலையில், புதிய சீரிஸ் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறாமல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

விற்பனை நிறுத்தம், விலை குறைவு: ஐபோன் 16 சீரிஸ் அறிவிப்புடன், ஆப்பிள் அதன் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10,000 குறைத்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல்கள் தேர்ட் பார்ட்டி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் இன்னும் கிடைக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்பிள் நிறுவனம் ரீபண்ட் வழங்க தொடங்கி உள்ளது. உதாரணமாக இப்போது ஐபோன் பழைய மாடல்கள் 10 ஆயிரம் விலை குறைந்து உள்ளது. ஆனால் நீங்கள் சில நாட்களுக்கு முன்புதான் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கி இருப்பீர்கள்.

சமீபத்தில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 14 அல்லது iPhone 14 Plus ஆகியவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் விலைக் குறைவைத் தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெற அல்லது கிரெடிட்டைப் பெற அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரீபண்ட் பெற தகுதி என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்கு முன் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை வாங்கியிருக்க வேண்டும்.

iPhone 15 மற்றும் 14ல் ரூ. 10,000 ரீஃபண்ட் பெறுவதற்கான படிகள்: அசல் ரசீது இருந்தால், வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோருக்குச் சென்று அல்லது Apple இன் வாடிக்கையாளர் கஸ்டமர் கேரை 000800 040 1966 இல் தொடர்புகொள்வதன் மூலம் ரீ பண்ட் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

14-நாள் இடைவெளிக்குள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணத்தைத் திரும்பப்பெறும் வாய்ப்பு வழங்கப்படும். மற்றவர்களுக்கு இந்த ரீ பண்ட் பணம் வழங்கப்படாது. அதேபோல் ஒரு நபர் நிறைய போன்கள் வாங்கி இருந்தால்.. அதிகபட்சம் 10 போன்களுக்கு ரீபண்ட் தொகையை வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+