BSNL: 600 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள்! ஓராண்டுக்கு பிஎஸ்என்எல்-இன் தெறி பிளான்! ரேட் கூட கம்மிதான்
சென்னை: அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் டெலிகாம் துறையில் மெல்லக் கம்பேக் கொடுத்து வருகிறது. மக்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் பல திட்டங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே 600 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் என பல அட்டகாசமான வசதிகளைக் கொண்ட பேக்கை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல டெலிகாம் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை பிரதான நிறுவனங்களாக உள்ளன. இருப்பினும், அந்த நிறுவனங்களின் ரீச்சார்ஜ் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் சிரமத்தைச் சந்திக்கிறார்கள்.

கம்பேக் கொடுக்கும் பிஎஸ்என்எல்
இதற்கிடையே அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் இப்போது மெல்லக் கம்பேக் கொடுத்து வருகிறது. தனது குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களால் சந்தையில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நீண்ட கால பலன்களைக் குறைந்த ரேட்டில் வழங்குவதன் மூலம் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த பி.எஸ்.என்.எல் தொடர்ந்து முயன்று வருகிறது.
ஓராண்டு திட்டம்
அப்படி பி.எஸ்.என்.எல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய திட்டங்கள் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படியொரு திட்டம் தான் இந்த ரூ.1,999 பிளான். எது ரூ.2000ஆ என நீங்கள் ஷாக் ஆகலாம். ஆனால், ஒரு ஆண்டு வேலிடிட்டி உடன் இந்த பிளானில் இருக்கும் வசதிகளை எல்லாம் பார்த்தால் இது ஓகே என்றே நமக்குத் தோன்றும். இந்த பிளானில் மக்கு அன்லிமிடெட் அழைப்புகள், அதிவேக டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். ஓராண்டுக்கு அடிப்படைத் தேவைகள் எல்லாம் கவர் செய்ய விரும்புவோருக்கு ஏற்றதாக இது இருக்கும்.
இந்த ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது. இதில் 600ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ். ஆகியவை கிடைக்கின்றன. நாடு முழுக்க உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மாதாமாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என நினைப்போர் இந்த ஒரு ரீசார்ஜ்ஜை மட்டும் செய்து ஆண்டு முழுக்க ஓட்டிவிடலாம்.
கம்மி தான்
ஏர்டெல், ஜியோ மற்ற நிறுவனங்களும் கூட இதுபோன்ற ஆண்டு திட்டங்களை வைத்துள்ளன. ஆனால், அவை ரேட் ரொம்பவே அதிகம். உதாரணமாக ஏர்டெல் நிறுவனத்தின் ஆண்டு திட்டம் ரூ.2,249ல் தொடங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தாலும் அதில் அதிகபட்சமே நமக்கு 30ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். இருந்தாலும் டேட்டா குறைவாகவே இருக்கிறது. ஜியோவின் நீண்ட காலத் திட்டம் இதைவிட அதிகமாக ரூ.3,599க்கு தான் இருக்கிறது.
மற்ற நிறுவனங்கள்
ஜியோ திட்டத்தில் கூடுதல் பலன்கள் இருந்தாலும், பி.எஸ்.என்.எல்-லின் ரூ.1,999 பிளான் இந்தக் கேட்டகிரியில் மிகவும் குறைந்த விலையில் நமக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டுத் திட்டத்துடன், பி.எஸ்.என்.எல். தனது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகச் சிறப்பு ரூ.1 ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த பிளானில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.. 30 நாட்களுக்கு இலவச அழைப்புகள், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ். கிடைக்கும். மேலும், இதில் நாடு முழுவதும் முழு ரோமிங்கும் அடங்கும்.
அதேநேரம் இது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ரூ.1 சலுகையைப் பெற, சலுகைக் காலத்தில் புதிய பி.எஸ்.என்.எல். சிம் கார்டை வாங்க வேண்டும். வெறும் ரூ.1 ரீசார்ஜ் தொகையுடன் கூடிய இந்தத் திட்டம், இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் மிகவும் மலிவானதாகும்.












Click it and Unblock the Notifications