Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே! சின்ன வயசில் இவ்ளோ சாதுர்யமா? வியந்து போன ஆனந்த் மகிந்திரா.. கொடுத்த பெரிய வெகுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு வயது குழந்தையை குரங்கிடம் இருந்து அலெக்சா கருவி மூலம் 13 வயது சிறுமி காப்பாற்றிய வீடியோ அண்மையில் தீயாக பரவியது. இந்த நிலையில் நொடிப்பொழுதில் குழந்தையை காப்பாற்றிய 13 வயது சிறுமியின் சாதுர்யத்தை பார்த்து வியந்து போன தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா அந்த சிறுமிக்கு சிறந்த வெகுமதியையும் அளித்துள்ளார்.

தெழில்நுட்ப சாதனங்கள் தற்போது மனித வாழ்க்கையில் அத்தியாவசியமாகிவிட்டது. அதற்கு சிறந்த உதாரணமாக செல்போனை சொல்லலாம். வெறும் தொலைத்தொடர்புக்காக செல்போனை பயன்படுத்திய காலம் போய் தற்போது நமது பெரும்பாலான பணிகளை விரல் நுனியில் முடித்துவிடும் அளவுக்கு செல்போனில் வசதிகள் பெருகிவிட்டன.

Business Man Anand Mahindra offers job to UP girl who escapes monkey attack using Alexa technology

அலெக்சா கருவி: சந்தையில் புதுபுது தொழில் நுட்ப கருவிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படிதான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அமேசான் நிறுவனம் அலெக்ஸா என்ற கருவியை அறிமுகப்படுத்தியது. இந்த கருவியை பொறுத்தவரை நாம் வாய்ஸ் கமாண்ட் கொடுத்தாலே போதும்.. நாம் கேட்ட தகவலை கொட்டி விடும்.


எடுத்துக்காட்டாக, ரஜினியின் அடுத்த படம் என்று கேட்டால் நொடியில் முழு தகவலோடு பதிலளிக்கும்.. இப்படி ஏராளமான பல தகவல்கள் அலெக்சா கருவியில் உள்ளது. பொதுவாக தொழில் நுட்ப கருவிகளை மனிதன் தனது ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தினால் அதில், பல நன்மைகளே உள்ளன. இதை உதாரணப்படுத்தும் வகையில், தான் அண்மையில் ஒரு நிகழ்வு உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது.

குரங்கிடம் இருந்து காப்பாற்றிய சிறுமி: வீட்டிற்குள் புகுந்த குரங்கிடமிருந்து அலெக்ஸா கருவி உதவியுடன் சிறுமி உயிர் தப்பியது குறித்த செய்திகள் அண்மையில் வைரலாகின. அதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று இருந்தார். வீட்டில் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்த போது, அந்த 13- வயது சிறுமி தனது அக்காவின் மகளான 1 வயது குழந்தையுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டிற்குள் திடீரென்று புகுந்த குரங்கு ஒன்று அழிச்சாட்டியம் செய்தது. வீட்டில் கிடந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு குழந்தை நோக்கி சென்றது. ஆனால், மாடியில் நடந்த சம்பவம் கீழே இருந்த வீட்டினருக்கு கேட்கவில்லை. இதனால், குரங்கிடம் இருந்து தன்னையும் 1 வயது குழந்தையும் எப்படி காப்பாற்றுவது என பரிவதிவித்த நிகிதாவிற்கு சட்டெனெ ஒரு யோசனை தோன்றியது.

வியந்து போன ஆனந்த் மகிந்திரா: வீட்டின் ஃப்ரிட்ஜில் அலெக்சா கருவி இருந்ததை பார்த்து நாய் மாதிரி குரைக்குமாறு சொன்னாள். உடனே அலெக்ஸா கருவியில் நாய் போல குரைக்க ஆரம்பித்தது. இதனால் பயந்து போன குரங்கு வீட்டில் இருந்து ஓடியது. 13- வயதே ஆன சிறுமி நிகிதா சாதுர்யமாக செயல்பட்டு குரங்கிடம் இருந்து தப்பியது வைரல் செய்தியானது.

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா கண்ணிலும் இந்த செய்தி பட்டது. இதைப்பார்த்த அனந்த மகிந்திரா, சிறுமியின் செயலை பாராட்டியதோடு... படித்து முடித்த பிறகு வேலை தேடினால்,.. தனது நிறுவனத்தில் வேலை கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

நிகிதா படிப்பை முடித்த பிறகு:
இது தொடர்பாக ஆன்ந்த மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- இந்த யுகத்தின் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது நாம் தொழில்நுட்பத்தின் அடிமைகளாகவோ அல்லது எஜமானர்களா என்பதுதான். இந்த சிறுமியின் செயல், தொழில்நுட்பம் எப்போதும் மனித புத்திசாலித்தனத்தை தூண்டும் என்பதை காட்டுவது ஆறுதலாக இருக்கிறது.

சிறுமியின் விரைவான சிந்தனை அசாதாரணமனது. முற்றிலும் கணிக்க முடியாத உலகத்தில் தனது தலைமைத்துவ பண்மை நிகிதா நிருபித்துள்ளார். நிகிதா படிப்பை முடித்த பிறகு, கார்ப்பரேட் உலகில் வேலை செய்ய முடிவு செய்தால், மகிந்திரா நிறுவனம் அவருக்கு வேலை கொடுக்க தயாராக உள்ளது” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+