உங்க மொபைல் மழைநீரில் நனைந்தால்.. உடனே இதை செய்யுங்கள் போதும்! அரிசியில் போட்டால் சுத்தமா யூஸ் இல்லை
சென்னை: மிக்ஜாம் புயலால் மழை கொட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீரில் உங்கள் செல்போன் நனைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் மிரட்டும் நிலையில், இதுபோன்ற நேரங்களில் எளிதாக செல்போன்கள் பாதிக்கப்படும் சூழல் இருக்கிறது. மழை கொட்டும் போது நமது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

என்ன செய்ணும்: முதலில் வாட்டர் ப்ரூஃப் கவர்களை பயன்படுத்துங்கள். மழைநீரில் இருந்து உங்கள் செல்போனை பாதுகாக்க இதுதான் சிறந்த வழி.. இந்த கேஸ்கள் உங்கள் மொபைலை ஈரத்தில் இருந்து சீல் செய்து பாதுகாக்க உதவும். இவை பிரத்யேகமாக செல்போன்களை மழையில் இருந்து பாதுகாக்க கான் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கவர்களில் போட்டு உங்கள் செல்போன்களை பயன்படுத்துங்கள்.
வாட்டர் ப்ரூஃப் கவர் வாங்க முடியவில்லை என்றால் நீர் புகாமல் இருக்க ஜிப் லாக்குகளை கூட பயன்படுத்தலாம் இது வாட்டர் ப்ரூஃப் கவர்களை விட சற்று விலை குறைவு. வாட்டர் ப்ரூஃப் கவர் அளவுக்கு இது பாதுகாப்பை தராது என்ற போதிலும், ஒரளவுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்.
கடைசி வழி: எதுவுமே இல்லாமல் மழை பெய்யும் போது வெளியே மாட்டிக் கொண்டால் பேக் இருந்தால் அதில் போட்டுவிடுங்கள். அல்லது உங்கள் பாக்கெட்டில் செல்போன்களை வைத்துவிடுங்கள். இது குறைந்தபட்ச பாதுகாப்பையாவது உங்கள் செல்போன்களுக்கு தரும்.
மழை அதிகமாக பெய்யும் போது வெளியில் செல்போன்களை பயன்படுத்தாதீர்கள். நேரடியாக மழையில் செல்போன்களை பயன்படுத்துவது தான் ரொம்பவே ஆபத்து. இதுபோன்ற நேரங்களில் மழை நீர் மிக எளிதாக செல்போனுக்குள் செல்லும் அபாயம் இருக்கிறது. எனவே, மழை பெய்யும் போது முடிந்தவரை செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
ஈரமான கைகள் வேண்டவே வேண்டாம்: கைகள் ஈராகமாக இருக்கும் போது எப்போதும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் கைகள் ஈரமாக இருந்தால் உங்களால் செல்போன்களை பிடிப்பதே கடினம். அதுபோன்ற நேரத்தில் அது எளிதாக கீழே விழும் அபாயம் இருக்கிறது. இது அனைத்தையும் தாண்டி உங்கள் செல்போன் ஈரமாகிவிட்டால் பதற வேண்டாம். உடனடியாக நீங்கள் சில விஷயங்களை செய்தால் உங்கள் செல்போனை பாதுகாக்க முடியும்.
முதலில் உங்கள் மொபைல் மழை நீரில் நனைந்துவிட்டால் சுவிட்ச் ஆப் செய்துவிடுங்கள். மொபைல் பெரும்பாலும் நீரில் பட்டால் தானாக ஆப் ஆகும். ஆப் ஆகவில்லை என்றாலும் நீங்களே ஆப் செய்துவிடுங்கள். இல்லையென்றால் ஷார்ட் ஷர்கியூட் ஆகும் அபாயம் இருக்கிறது. அடுத்து சிம் கார்டு, மெமரி கார்டுகளை வெளியே எடுத்துவிடுங்கள். பிறகு மொபைலில் ஈரத்தை காட்டன் துணியை கொண்டு துடைக்கலாம்.
இதை மட்டும் செய்ய வேண்டாம்: இதுபோன்ற நேரங்களில் ஹேர் ட்ரையர் அல்லது நெருப்பில் காட்டி எல்லாம் சூடாக்க வேண்டாம். அந்த அதீத வெப்பம் மொபைலை சேதப்படும். அதேபோல மொபைல் ஆப் ஆகி இருந்தால் தப்பி தவறியும் சார்ஜ் போடாதீர்கள் நீர் இருக்கும் போது செல்போனை சார்ஜ் போட்டால் அது செல்போனை மொத்தமாக காலி செய்துவிடும். எனவே இதையெல்லாம் செய்ய வேண்டாம்.
கடைசி ஆப்ஷன்: நீரை அகற்ற செல்போனை நன்கு shake அதாவது ஆட்டாலம், அது அதிகப்படியான நீரே வெளியேற்றும். அடுத்து சூரிய ஒளி நேரடியாக படாமல் அதை உலர்த்தலாம். மொபைலை அரிசியில் போட்டு வைப்பது எல்லாம் ஈரத்தன்மை குறைக்காது என்று பிரபல ஆங்கில இதழான தி கார்டியன் கூறியுள்ளது. எனவே, செல்போன் நீண்ட நேரம் ஆகியும் ஒர்க் ஆகவில்லை என்றால் அரிசியில் போட்டு நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக சர்வீஸ் சென்டருக்கு செல்லுங்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications