இந்த தப்பை பண்றீங்களா? “உஷார்”.. போன் சார்ஜ் போட்டுக்கிட்டே தூங்கினா அவ்ளோதான்.. ஆப்பிள் எச்சரிக்கை!
சென்னை: ஆப்பிள் ஐ போன் சார்ஜ் ஏறும்போது அதன் அருகில் தூங்கக்கூடாது என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சார்ஜ் போட்டபடியே நீங்கள் தூங்கும் தலையணையில் போனை வைத்துவிடாதீர்கள் என்றும் ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
மொபைல் வெடித்து ஏற்படும் விபத்துகள், சார்ஜ் ஏறும்போது போன் பேசியதால் வெடித்த செல்போன், இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால் வெடித்துச் சிதறிய மொபைல் போன், என்பது போன்ற செய்திகளை அவ்வப்போது பார்த்திருப்போம். பல்வேறு ஆய்வுகளும் கூட மொபைல்கள் சூடாகி அதன் பேட்டரி வெடித்து சிதறுவதை உறுதி செய்துள்ளன.

தற்போது ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சார்ஜ் ஏறும்போது, போனை தலையணையிலேயே வைத்திருப்பதையும், போனை கையில் வைத்துக்கொண்டே, நம் நெஞ்சில் வைத்துக்கொண்டோ தூங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் ஆப்பிள் நிறுவனம் வார்னிங் கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், உங்கள் மொபைல் மற்றும் சார்ஜர்களை மின்சாரத்தோடு இணைத்தபடியே விட்டுவிட்டு உறங்கச் செல்வதோ, தலையணை, படுக்கை உள்ளிட்ட பகுதிகளில் வைத்துவிட்டு உறங்குவதோ அல்லது காற்றோட்டம் இல்லாத இடங்களில் மொபைலை சார்ஜில் போட்டு விட்டுச் செல்வதோ கூடாது.
உங்கள் ஐ போன்களை நல்ல காற்றோட்டம் அதிகமான பகுதிகளில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சேதமான சார்ஜிங் கேபிள் அல்லது சார்ஜர்களிலோ மற்றும் சிங்க், குளியல் தொட்டி போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள சூழலில் வைத்தோ சார்ஜ் செய்வது கூடாது என்றும் ஆப்பிள் நிறுவனம் தமது யூசர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாகவே மொபைல்களை சார்ஜ் செய்யும்போது அவை குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும். அந்த சமயத்தில் சார்ஜர் மற்றும் போன் இருக்கும் பகுதி காற்றோட்டம் இல்லாத பகுதியாக இருந்தால் அந்த வெப்பம் வெளியேற வழியின்றி உங்கள் மொபைல் வெடித்து சிதற வாய்ப்புள்ளது. எனவே, காற்றோட்டம் அதிகமான பகுதிகள் மற்றும் டேபிள் போன்ற பெரிய பரப்புகளில் வைத்து சார்ஜ் செய்யுங்கள் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications