கால் செய்வதை விட மெசேஜ் தான் கஷ்டமாம்.. இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா.. அடடே சுவாரசியமாக இருக்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நடந்தது. கடந்த 1992ம் ஆண்டு இதே மாதம் தான் உலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. அப்போது அனுப்பப்பட்ட இந்த ஒரு குறுஞ்செய்தி நாம் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளும் முறையையே மொத்தமாக மாற்றிப் போட்டது.

இந்த நவீனக் காலத்தில் செல்போன் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்ற சூழலே இருக்கிறது. கிட்டத்தட்ட உடலில் ஒரு பாகத்தைப் போலவே நாம் செல்போனை எங்குச் சென்றாலும் எடுத்துச் சென்று வருகிறோம்.

world offbeat

வரலாறே இருக்கு: செல்போன் நமக்கு அள்ளி தரும் வசதிகளும் கூட இதற்கு முக்கியமான காரணமாகும். இப்போது நாம் இந்த வசதிகளை எல்லாம் ஈஸியாக யூஸ் செய்தாலும் கூட இவை அவ்வளவு எளிமையாக உருவானது இல்லை. இதில் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வரலாறே இருக்கிறது. இன்று நாம் இஷ்டத்திற்கு அனுப்பித் தள்ளுகிறோமே மெசேஜ் அதன் பின்னணியிலும் ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

இன்று நாம் வாட்ஸ்அப், மெசென்ஜர் உள்ளிட்ட இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியில் நொடிக்குப் பல நூறு மெசேஜ் கூட அனுப்பலாம். ஆனால், இதற்கெல்லாம் விதை போட்டது என்னவோ குறுஞ்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ் தான். கடந்த 1992ம் ஆண்டு டிச. 3ம் தேதி தான் உலகின் முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. தகவல்தொடர்பில் அது ஒரு புதிய சாதனையாகவே பார்க்கப்பட்டது. அப்போது முதல்முறையாக "மெர்ரி கிறிஸ்துமஸ்" என்ற வாழ்த்து செய்தியே முதலில் அனுப்பப்பட்டது.

எஸ்எம்எஸ்: 1973ம் ஆண்டிலேயே செல்போன் மூலம் தொலைப்பேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 1870களிலேயே முதலில் லேண்ட்லைன் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் போன் கால் மேற்கொள்ளப்பட்டதால் செல்போன்களில் அழைப்பு என்பது ஈஸியாகவே இருந்தது. ஆனால், குறுஞ்செய்தி என்பது அப்படி இல்லை. அப்போது வரை செல்போன்கள் குரல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நீங்கள் சொல்ல வருவதை எழுத்து மூலம் தெளிவாகச் சொல்ல அப்போது எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லை. தந்தி மற்றும் கடிதம் மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருந்தது.

160 லெட்டர் கட்டுப்பாடு ஏன்: எனவே, செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப முடிந்தால் அது மிகப் பெரிய புரட்சியாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். இந்த கான்செப்ட்டை ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃப்ரீட்ஹெல்ம் ஹில்பிராண்ட் மற்றும் பெர்னார்ட் கில்லேபார்ட் ஆகியோர் 1984ம் ஆண்டு உருவாக்கினர். நாம் சொல்ல வேண்டிய கருத்துகளை ஒரே மெசேஜ்ஜில் சொல்ல 160 லெட்டர்கள் போதும் என இவர்கள் நினைத்தனர். இதன் காரணமாகவே ஒரு மெசேஜ்ஜில் 160 லெட்டர் இருக்கும் என்பது முடிவானது. இப்போது வரை அதுவே தொடர்கிறது.

பல ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் நிறுவனமான செமா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் நீல் பாப்வொர்த் என்பவர் 1992ம் ஆண்டு டிச. 2ம் தேதி இந்த மெசேஜ்ஜை அனுப்பினார். அதுதான் "மெர்ரி கிறிஸ்துமஸ்.." இது ரொம்பவே எளிமையான மெசேஜ்ஜாக தோன்றினாலும் கூட தகவல் தொடர்பு வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றே சொல்லலாம்.

கஷ்டம்: தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தோம் என்றால் வாய்ஸ் கால் என்பது குறுஞ்செய்தியை விடக் கஷ்டம். ஆனால், கிரஹாம் பெல் ஏற்கனவே லேண்ட் லைனுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி இருந்ததால்.. அதை வைத்து எளிதாக செல்போன் வாய்ஸ் காலை உருவாக்கிவிட்டனர். ஆனால், எஸ்எம்எஸ் அப்படி இல்லை. அது செல்போனுக்கு மட்டுமே தனித்துவமானது. இதன் காரணமாகவே 1984ல் இதற்கான சிந்தனை உருவானாலும் கூட சுமார் 8 ஆண்டுகள் கழித்தே முதல் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+