டெக்னாலஜியில் ஸ்மார்ட்டாக இருக்கும் 4 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
ராசி பலன்: 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள், படைப்பாற்றல், திறமை இருக்கும். அந்த வகையில், எந்தெந்த ராசியினர் தொழில் நுட்பம் தொடர்பான விஷயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மேஷம், சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் தாங்கள் பேசும் வார்த்தைகளிலும், எண்ணும் எண்ணங்களிலும் மிகவும் நுட்பமாக சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்யக்கூடிய இவர்கள் கட்டடக் கலை, பொறியியல், கணினி, தொழில்நுட்பம் போன்ற விஷயங்களில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். தொழில்நுட்பத் துறையில் அசாத்திய திறன் பெற்றவர்களாக இருக்கும் இவர்கள் எப்போதுமே வேலையிலும், வியாபாரம், தொழிலிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள்.

கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் இந்த ராசியை சேர்ந்தவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பார்கள், கலைத் துறை, மருத்துவத் துறை, பொறியியல் துறை, அறிவியல் துறையில் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில், டெக்னாலஜி - தொழில்நுட்பத் துறையில் ஜொலிக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் - செய்யும் தொழிலில் சுறுசுறுப்பாகவும், புதுப்புது சவால்களையும் எதிர்பார்க்க கூடியவர்களாக மேஷ ராசிக்காரர்கள் இருப்பார்கள். தங்களுடைய இலக்கை நோக்கி பயணிக்கும் இவர்கள் கனவுகளை நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். எப்போதுமே வேகத்தோடும், திறமையாகவும் இருக்கும் இவர்கள் கலைத் துறையில் சிறப்பாக இருப்பார்கள். தொழில்நுட்பத்தில் சிறந்த புத்திக்கூர்மை உடையவர்களாக விளங்குவார்கள். மேஷ ராசியினர் பொறியியல், கட்டடத் துறையில் சிறந்து விளங்குவார்கள். தங்களுக்கென தனி பெயர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் மிகவும் புத்திக்கூர்மை உடைய நபர்களாக இருப்பார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்துவர்களாக இருப்பார்கள். தங்களுடைய திறமையால் கடினமான விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பார்கள். எந்தவொரு விஷயமானாலும் அதனை துல்லியமாக கவனிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் மூலமாக அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். கஷ்டமான காலங்களில் இவர்களுடைய தொழில்நுட்ப அறிவால் எளிதாக செய்து முடிப்பார்கள். புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விஷயங்களை கற்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். தொழில்நுட்பத் துறையில் மிகவும் ஆர்வத்துடனும், புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்பவராகவும் இருப்பார்கள். எடுத்த காரியங்களை அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார்கள். கடின உழைப்பாளிகளான சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக இருப்பார்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் அதில் கடின உழைப்பைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு தொழில்நுட்பம் கைவந்த கலையாக இருக்கும். சிறப்பாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை விரைவில் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். தொழில்நுட்பம், புதிய கருவிகளை கையாள்வது, சாஃப்ட்வேர் துறையில் சிறந்து விளங்குவார்கள். வேலையில் உள்ள சிரமங்களை தங்களுடைய சிறப்பான அணுகுமுறையால் தீர்ப்பார்கள். புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு அதன் மூலம் ஆதாயம் காண்பார்கள்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications