"இனி இலவசம் எல்லாம் இல்லை.." மிக முக்கியமான விதியை மொத்தமாக மாற்றிய கூகுள்.. சிக்கல்!
வாஷிங்டன்: ஜிமெயில் பயனர்களுக்குக் கூகுள் நிறுவனம் ஒரு புதிய 'அதிர்ச்சி' செய்தியைத் தந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் 15 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் பாலிசியில் கூகுள் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இதுவரை புதிய ஜிமெயில் கணக்கு தொடங்கினால் கூகுள் டிரைவ், போட்டோஸ் மற்றும் மெயில் என அனைத்திற்கும் சேர்த்து 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி புதிய கணக்கு தொடங்குபவர்களுக்கு வெறும் 5 ஜிபி மட்டுமே இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஸ்டோரேஜ் விதிகளில் கூகுள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

15 ஜிபி இல்லை
ரெடிட் மற்றும் எக்ஸ் தளங்களில் பயனர்கள் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, புதிய கணக்கு தொடங்கும் போது உங்களது மொபைல் எண்ணை இணைத்து வெரிஃபை செய்தால் மட்டுமே பழையபடி 15 ஜிபி முழுமையாகக் கிடைக்கும். ஒருவேளை போன் நம்பரை இணைக்க மறுத்தால், உங்களது ஸ்டோரேஜ் அளவு வெறும் 5 ஜிபியோடு முடக்கப்படும். "ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே 15 ஜிபி இலவசம்" என்பதை உறுதி செய்யவே இந்த மொபைல் எண் கட்டாய விதியைக் கூகுள் கொண்டு வருகிறதாம்.
பலரும் இந்த 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த ஒரு லூப் ஹோலை பயன்படுத்தி வந்தனர். அதாவது ஒரு கூகுள் கணக்கில் 15 ஜிபி மெமரி தீர்ந்தவுடன் கூகுள் ஒன் சந்தா கட்ட விரும்பாமல், புதுசு புதுசாக ஜிமெயில் ஐடி ஓப்பன் செய்து டேட்டாவை இலவசமாகச் சேமித்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கூகுள் இந்த முறையைக் கையாள்கிறது.
நோட் பண்ணுங்க
போன் நம்பர் வெரிஃபிகேஷன் மூலம் போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் மெயில்களை பெருமளவு குறைக்க முடியும் எனக் கூகுள் நம்புகிறது. கூகுள் தனது அதிகாரப்பூர்வப் பக்கங்களில் "15 ஜிபி இலவசம்" என்றிருந்த வாசகத்தை, கடந்த மார்ச் மாதம் சைலண்டாக "15 ஜிபி வரை" (Up to 15 GB) என மாற்றியிருப்பது இந்த புதிய பாலிசியின் முன்னோட்டமே ஆகும். கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை புரோமோட் செய்யும் வகையிலேயே இந்த புதிய பாலிசி கொண்டு வரப்பட்டுள்ளது.
தீர்வு என்ன
ஒருவேளை உங்களுக்கு 5 ஜிபி அல்லது 15 ஜிபிக்கும் மேல் கூடுதல் மெமரி தேவைப்பட்டால், கூகுள் ஒன் பிளானை எடுக்கலாம். இதில் Google One Lite திட்டத்தில் நமக்கு 30 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். இதற்கு நாம் மாதம் ₹59 கட்டண வேண்டும். அடுத்து பேசிக் பிளானில் 100 ஜிபி வரை கிடைக்கும். நாம் ₹130 கட்ட வேண்டும். அடுத்து ப்ரிமீயம் பிளானில் 2 TB ஸ்டோரேஜ்ஜிற்கு ₹650 கட்ட வேண்டும்.
இப்போது முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளான கென்யா மற்றும் நைஜீரியாவில் புதிய கணக்குகளுக்கு இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் பல்வேறு நாடுகளிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும். விரைவில் இந்தியாவிலும் இந்த திட்டம் அமலுக்கு வரலாம்.
மாதாமாதம் கட்டணம்
ஆரம்பத்தில் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டு, பின்னர் மெல்ல மெல்லக் கட்டணம் என்பதே இப்போது பெரும்பாலான டெக் நிறுவனங்களின் பார்முலாவாக இருக்கிறது. 15 ஜிபி மெமரியே பற்றாக்குறையாக இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், அதை 5 ஜிபியாக குறைப்பது என்பது கூகுள் ஒன் சந்தா எடுக்க வைப்பதற்கான ஒரு அக்மார்க் கார்ப்பரேட் வியூகம் தான்!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications